» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
ஓட்டுநர் உரிமம் இல்லாத வாகனங்கள் பறிமுதல் : குமரி மாவட்ட போலீசார் அதிரடி!
புதன் 15, ஜனவரி 2025 12:16:06 PM (IST)
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓட்டுநர் உரிமம் இல்லாத வாகனங்கள் மற்றும் நம்பர் பலகை இல்லாத இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவுப்படி காவல்துறை காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ் குமார் மேற்பார்வையில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பிரபு, போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஜெயபிரகாஷ் மற்றும் போக்குவரத்து காவலர்கள் கன்னியாகுமரி ரவுண்டானா மற்றும் சிலுவைநகர் பகுதியில் வாகன தணிக்கையின் போது 18 வயதிற்கு குறைவான ஓட்டுநர் உரிமம் இன்றியும், நம்பர் பலகை இல்லாமலும், தகுந்த ஆவணங்கள் இன்றியும் ஓட்டி வந்த 15 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். பின்னர் ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டிய ஓட்டுநர்களின் பெற்றோர்களை வரவழைக்கப்பட்டு தக்க அறிவுரைகள் வழங்கி அனுப்பபட்டது.