» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தைப் பொங்கல் திருநாள் : விஜய் வசந்த் எம்.பி வாழ்த்து!

திங்கள் 13, ஜனவரி 2025 11:59:42 AM (IST)

தைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு விஜய் வசந்த் எம்.பி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்.பி., வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்," உலகமெங்கும் வாழும் தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் இன்பமும், மகிழ்ச்சியும் நிறைந்த பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்.

தைத்திருநாளாம் இந்த பொங்கல் நாளில் உங்கள் அனைவர் வாழ்விலும் எல்லாம் நிறைவுடன் கிடைக்க வேண்டி வாழ்த்துகிறேன். அறுவடை  திருநாளாம் இந்நாளில் நாமும் சோறூட்டும் உழவர் பெருமக்கள் அனைவரையும் நன்றியுடன் போற்றுவோம். அத்துடன் உழவுக்கு துணை நிற்கும் கால்நடைகளையும் இந்நாளில் வணங்கி மகிழ்வோம்.

வண்ண கோலம் போல் வண்ணமயமான வாழ்க்கை, பொங்கி வழியும் இன்பம் என்றும் உங்கள் வாழ்வில் நிறைந்திட வாழ்த்துகிறேன். எல்லா வளமும் பெற்று அனைவரும் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன். பொங்கல் நல்வாழ்த்துக்கள். என தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory