» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் பணி 2 ஆண்டுகளில் நிறைவு பெறும்: இஸ்ரோ தலைவர் தகவல்
திங்கள் 13, ஜனவரி 2025 8:31:41 AM (IST)

குலசேகரன்பட்டினத்தில் நடைபெற்று வரும் ராக்கெட் ஏவுதளம் பணி 2 ஆண்டுகளில் நிறைவு பெறும் என இஸ்ரோவின் புதிய தலைவர் நாராயணன் கூறினார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) தலைவராக பதவியேற்க உள்ள குமரி மாவட்டத்தை சேர்ந்த நாராயணன் நேற்று காலை சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதிக்கு வந்தார். அங்கு அய்யா வைகுண்டசாமியை தரிசனம் செய்த அவருக்கு தலைமை பதி சார்பில் இனிமம் வழங்கப்பட்டது. பின்னர் தலைமை பதி நிர்வாகிகள் மற்றும் உறவினர்களை சந்தித்து ஆசி மற்றும் வாழ்த்துக்களை பெற்றார்.
அதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: இந்திய விண்வெளித்துறையை வழிநடத்தக்கூடிய பொறுப்பை பிரதமர் மோடி எனக்குத் தந்திருக்கிறார். இது ஒரு நல்ல பொறுப்பு. விண்வெளித்துறை நாட்டு மக்களுக்காக குறிப்பாக செயற்கை கோள்கள் மூலம் தொலைக்காட்சி ஒளிபரப்பு, டெலி கம்யூனிகேஷன் தொலைத்தொடர்பு மற்றும் செயற்கை கோள், தொலை உணர்வு செயற்கை கோள் ஆகியவற்றை விண்வெளிக்கு செலுத்தி பல்வேறு பணிகளை செய்து வருகிறது.
எனக்கு இந்த பதவி இறைவனுடைய அருளாலும், பெரியோர்களின் ஆசியும், உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஆசிர்வாதத்தாலும் இஸ்ரோவில் உள்ள ஒட்டுமொத்த அனைவரின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றியாலும், பிரதமர் மோடி என் மீது வைத்த நம்பிக்கையாலும் கிடைத்துள்ளது. இந்த பொறுப்பை நான் சிறந்த முறையில் செயல்படுத்துவேன்.
இஸ்ரோவில் பணி புரியும் 17 ஆயிரத்து 500 பேரின் உழைப்பு தான் இஸ்ரோவின் வெற்றி. உலக அளவில் இஸ்ரோவின் வெற்றிக்கு என்னுடைய தனிப்பட்ட பங்கு என கூற முடியாது. அனைத்து ஊழியர்களின் ஒருங்கிணைந்த சேவை கலந்த பணியே இஸ்ரோவின் வெற்றியாகும். இஸ்ரோவுக்கு அடுத்தடுத்து பல திட்டங்கள் உள்ளன. இந்தியாவிற்கு என தனி விண்வெளி ஆய்வுக் கூடம் அமைக்க இருக்கின்றோம். சந்திராயன்-3 திட்டம் நிலாவின் தென்துருவத்தில் இறங்கிய முதல் செயற்கை கோள் என்ற சாதனை படைத்தோம்.
சந்திராயன்-4 திட்டமானது நிலாவில் இருந்து மாதிரிகளை எடுத்து வந்து ஆராய்ச்சி செய்யும் திட்டமாகும். மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் சென்று திரும்பக்கொண்டு வருவதற்கான திட்டமும் உள்ளது. குலசேகரன்பட்டினத்தில் நடைபெற்று வரும் ராக்கெட் ஏவுதளம் பணி இன்னும் 2 ஆண்டுகளில் நிறைவு பெறும். விரைவில் நேவிகேஷன் சேட்டிலைட் அனுப்ப உள்ளோம். பதவி ஏற்புக்கு பின்பு சக அதிகாரிகளோடு விவாதித்து திட்டம் வகுக்க உள்ளேன்" என்று கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவிலில் பிப்.19ம் தேதி 6வது புத்தகத் திருவிழா தொடக்கம் : ஆட்சியர் அழகுமீனா தகவல்
வியாழன் 13, பிப்ரவரி 2025 3:53:01 PM (IST)

மருத்துவ வசதிகளை மேம்படுத்த கோரி விவாதம்: பாராளுமன்றத்தில் விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை!
வியாழன் 13, பிப்ரவரி 2025 11:34:34 AM (IST)

10 வயது சிறுமி பலாத்காரம்: சிறுவன் உள்பட 2 பேர் கைது
புதன் 12, பிப்ரவரி 2025 9:03:58 PM (IST)

நாகர்கோவில் நாகராஜா கோவிலில் தை திருவிழா தேரோட்டம் கோலாகலம்
புதன் 12, பிப்ரவரி 2025 4:57:36 PM (IST)

செண்பகராமன்புதூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆட்சியர் அழகுமீனா ஆய்வு
புதன் 12, பிப்ரவரி 2025 11:29:18 AM (IST)

பராமரிப்பு பணிகள்: திருக்குறள் எக்ஸ்பிரஸ் மாற்று வழித்தடத்தில் இயக்கம்!
புதன் 12, பிப்ரவரி 2025 11:26:30 AM (IST)
