» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

அமைதி, ஆரோக்கியம், மகிழ்ச்சி கொண்டு வரட்டும் : விஜய் வசந்த் எம்.பி புத்தாண்டு வாழ்த்து!

புதன் 31, டிசம்பர் 2025 11:33:44 AM (IST)

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு விஜய் வசந்த் எம்.பி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "அனைவருக்கும் எனது மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஆண்டின் அனுபவங்களையும் பாடங்களையும் சுமந்து கொண்டு, புதிய நம்பிக்கைகள், புதிய இலக்குகள், புதிய கனவுகளுடன் நாம் இந்த புத்தாண்டை வரவேற்கிறோம். சமூக நீதி, சமத்துவம், ஒற்றுமை, சகோதரத்துவம் ஆகிய மதிப்புகளை அடித்தளமாக கொண்டு, வளர்ச்சியும் மனிதநேயமும் இணைந்த இந்தியாவை உருவாக்குவது நமது கூட்டுப்பொறுப்பாகும்.

வரும் ஆண்டில் விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைத்துப் பிரிவினருக்கும் முன்னேற்றத்தின் ஆண்டாக அமைய வேண்டும். கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, அடிப்படை வசதிகள் ஆகியவற்றில் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி கிடைக்க நாம் தொடர்ந்து பாடுபடுவோம். இந்த புத்தாண்டு உங்கள் குடும்பங்களில் அமைதி, ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் வளம் கொண்டு வரட்டும். ஜனநாயகத்தின் வலிமையை காக்கவும், நாட்டின் எதிர்காலத்தை பாதுகாக்கவும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory