» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (கன்னியாகுமரி)

தூத்துக்குடி மாவட்ட கிரேன் உரிமையாளர்கள் நலச்சங்க 3-ஆம் ஆண்டு விழா!

புதன் 13, மே 2026 4:30:25 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட கிரேன் உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் 3-ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் அன்னையர் தின விழா, கனி பேலஸ் அரங்கில் நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்டத் தலைவர் சுயம்புலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவிற்கு, வில்லவராயர் குரூப் உரிமையாளர் ஜேசையா வில்லவராயர், ஜெயந்தி குரூப் பிரகாஷ், ஷோ ஷிப்பிங் கிஷோர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு கனரக கிரேன் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஏ.கே.மணி மற்றும் மாநில நிர்வாகிகள் பலரும் திரளாகக் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு எச்.எம்.எஸ் உழைப்பாளர் சங்க மாவட்டத் தலைவர் ராஜலட்சுமி ராஜ்குமார் மற்றும் மாவட்ட சட்ட உதவிமைய மூத்த வழக்கறிஞர் கலைச்செல்வி ஆகியோர் விழாவைத் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தனர்.

விழாவில் மாநிலத் துணைத் தலைவர் கலைவாணன், செயலாளர் பீர் முகமது, துணைத் தலைவர் பிரகாஷ், பொருளாளர் ஜெய்சங்கர், மக்கள் டெய்லி சி.இ.ஓ கி.ம. சங்கர், வ.உ.சி துறைமுக ஆணைய உறுப்பினர் துறைமுகம் சத்யா உட்படப் பல்வேறு முக்கியப் பிரமுகர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். தொழில் மேம்பாடு மற்றும் சங்கத்தின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

விழாவில் உலக அன்னையர் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி மகிழ்ச்சி பகிரப்பட்டது. இதனைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள், இன்னிசை கச்சேரி மற்றும் சங்க உறுப்பினர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டுப் பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான கிரேன் உரிமையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory