» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (கன்னியாகுமரி)
மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து தமிழக வெற்றிக் கழகம் ஆர்ப்பாட்டம்!
வியாழன் 19, டிசம்பர் 2024 5:08:19 PM (IST)
அம்பேத்கரை அவமதித்து பேசியதாக மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து தூத்துக்குடியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்த சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கரை அவமதித்து பேசியதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில் தென்பாகம் காவல் நிலையம் எதிரே உள்ள அம்பேத்கர் சிலை முன்பு மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.