» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (கன்னியாகுமரி)

நாசரேத் நூலகத்தில் சிறப்பு கவியரங்க நிகழ்ச்சி

புதன் 17, ஜூலை 2024 9:41:27 PM (IST)



நாசரேத் நூலக வாசகர் வட்டத்தில் சிறப்பு கவியரங்க நிகழ்ச்சி நடந்தது.

நூலக வாசகர் வட்டத்தலைவர் ஓய்வு பெற்ற வட்டாட்சியர் அய்யாக்குட்டி தலைமை வகித்தார். கவிதையின் சிறப்பு குறித்து ஓய்வு பெற்ற பேராசிரியர் காசிராஜன்  உரையாற்றி னார்.எழுத்தாளர் ஆறுமுகப்பெருமாள் கவிஞர்களை அறிமுகப்படுத்திப் பேசினார். 

நிகழ்ச்சியில் மணிமொழிச்செல்வன்,  ஆத்தூர் சாகுல், மூக்குப்பீறி தேவதாசன் ஞான்ராஜ், சுப்பிரமணிய சிவா,  பகவதிப்பாண்டியன், கவிதாயினி ராஜி ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் கவிதை வாசித்தனர். கவிதைகளின் சமூகத் தாக்கம் பற்றி வாசகர் வட்டத் துணைத் தலைவர் கொம்பையா  எடுத்துரைத்தார் .முன்னாள் வாசகர் வட்ட  தலைவர் கண்ணன் நன்றி கூறினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory