» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (கன்னியாகுமரி)
அமைச்சர் கீதாஜீவனிடம் பனைத்தொழிலாளர்கள் சங்கம் கோரிக்கை
ஞாயிறு 16, மார்ச் 2025 1:34:22 PM (IST)
தமிழ்நாடு பனைத்தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தமிழ்நாடு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் அவர்களிடம் மனு அளித்தனர்
தமிழ்நாடு பனைத்தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தமிழ்நாடு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் அவர்களிடம் பொதுச்செயலாளர் இராயப்பன் தலைமையில் மனு அளித்தனர் அந்த மனுவில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் வட்டம் குளத்தூர் வடபாகம் K. சுப்பிரமணியாபுரம் கிராமத்தில் சுமார் 500 குடும்பங்கள் வசித்துவருகிறார்கள் அனைவரும் பனைமரத் தொழில் செய்து அவரவர் குடும்பங்களையும் பனை மரத்தையும் பாதுகாத்து வருகின்றோம்
2003 ஆம் ஆண்டு விளாத்திக்குளம் வட்டாச்சியார் அலுவலகம் மூலம் நிரந்தர ஒப்படைப்பு ஆவணம் 2/141 நாள் 12.12.2003 படி 244 குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்பட்டு பனை மரத் தொழில்.செய்து கொண்டு பருவ காலங்களில் நிலக்கடலை .காணம் .தட்டம்பயிர் . போன்றவற்றை விவசாயம் செய்து வருகின்றனர் 2003 ஆம் ஆண்டு பனை மரத்திற்கு அரசுக்கு தீர்வை செலுத்த முடியாத ஏழை குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அப்போது பட்டா வாங்க இயலாமல் போய்விட்டது பட்டா.இல்லாத காரணத்தால் அரசு வழங்கும் விவசாய காப்பீடு போன்ற இதர மத்திய மாநில அரசு திட்டங்களில் பயன் பெற முடியாமல்.சிரமப்படுகிறார்கள் புல எண் 171/ 1ல் 552 செண்ட் 52ல் சிறு புலனாக பிரிக்கப்பட்டு உட்பிரிவு 323/1முதல் 436/1 முடிய சர்வே நம்பர்களாக பிரித்து பட்டா வழங்கப்பட்டது தற்சமயம் மீதமுள்ள குடும்பங்கள் பனை மரத்திற்கு அரசுக்கு தீர்வை செலுத்த தயாராக உள்ளோம் அப்பகுதியில் உள்ள நிலத்தடிநீரை சேமிக்கவும் பனை மரங்களை பாதுகாக்கவும் ஏதுவாக இருக்கும் சமூகம் கிருபை கூர்ந்து மீதமுள்ள நபர்களுக்கு பட்டா வழங்க தாழாமையுடன் வழங்குகிறோம் என்றிருந்தது இந்நிகழ்வில் அாிபாகரன் தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் சங்க பொருளார் மற்றும் செ. பழனிச்சாமி நாடாா் .சு.கல்யாணசுந்தரவேல் ஆகியோர் உடனிருந்தனர்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து தமிழக வெற்றிக் கழகம் ஆர்ப்பாட்டம்!
வியாழன் 19, டிசம்பர் 2024 5:08:19 PM (IST)
