» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (கன்னியாகுமரி)
இந்து முன்னணி சார்பில் கொள்கை விளக்க தெருமுனை கூட்டம்
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:55:53 AM (IST)

தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் கொள்கை விளக்க தெருமுனை கூட்டம் (மக்கள் சந்திப்பு) சிவன் கோவில் தேரடி முன்பு நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு மாநகர் மாவட்ட தலைவர் இசக்கிமுத்துக்குமார் தலைமை வகித்தார். நாராயணராஜ் சரவணக்குமார் முன்னிலை வகித்தனர். இதில் பேசிய இந்து முன்னணி மாநகர் மாவட்ட தலைவர் இந்து தர்மம் காக்க சனாதன தர்மத்தை காக்க இந்து முன்னணி போராடி வருகிறது. இந்துக் கொள்கையை விளக்கி தமிழகம் முழுவதும் இந்து முன்னணி கொள்கை விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்று வருகிறது என்றும் இந்து விரோத ஆட்சி நடத்தி வரும் திமுக அரசு மற்றும் தூத்துக்குடி திமுக மாநகராட்சி நிர்வாகம் உயர்த்திய வரிகளின் காரணமாக பொதுமக்களும் வணிக நிறுவனங்கள் நடத்தி வரும் சிறு குறு தொழில் மற்றும் கடை வைத்து வரும் வியாபாரிகளும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மின் கட்டணம் மூன்று மடங்கிற்கு மேல் உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடியில் பாரம்பரிய அடையாளமாக விளங்கும் தெப்பக்குளம் மாநகராட்சி சார்பில் நடைபெற்ற ஒழுங்கற்ற பணியின் காரணமாக பெரும் சேதம் கண்டுள்ளது. 150 ஆண்டுக்கு மேலான பழமை வாய்ந்த தெப்பக்குளம் சீர்குலையும் நிலையில் அபாய கட்டத்தில் உள்ளது. இது இந்துக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனை உடனடியாக சரி செய்து தர வேண்டும். தமிழகத்தில் விடியல் அரசு அனைத்து மதத்திற்கும் பொதுவானதாக ஆட்சி செய்வதாக கூறிக்கொண்டு ஒரு கண்ணில் பாலும் ஒரு கண்ணில் சுண்ணாம்பு வைக்கிறது. திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றலாம் என்று நீதிமன்றமே கூறிய பின்பும் சிறுபான்மை மாற்றுமத ஓட்டுக்களை குறி வைத்து அரசியலுக்காக திமுக அரசு இந்துக்களுக்கு விரோதமாக திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற விடாமல் தடுக்கிறது. இதை இந்து மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்த அரசுக்கு முடிவு கட்டுவார்கள். இவ்வாறு பேசினார்.
இந்நிகழ்வில் சுதாகர் மேற்கு மண்டல தலைவர் ஆறுமுகம் மேற்கு மண்டல துணைத் தலைவர்கோபி வடக்கு மண்டல பொதுச்செயலாளர் பாலமுருகன் வடக்கு மண்டலம் .வரதராஜ பெருமாள் மேற்கு மண்டல செயலாளர்பரமசிவன் மேற்கு மண்டல செயலாளர் லட்சுமணன் வடக்கு மண்டல பொறுப்பாளர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ் நாடகக் கலையின் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் பிறந்த நாள் விழா
திங்கள் 8, செப்டம்பர் 2025 10:15:09 AM (IST)

அமைச்சர் கீதாஜீவனிடம் பனைத்தொழிலாளர்கள் சங்கம் கோரிக்கை
ஞாயிறு 16, மார்ச் 2025 1:34:22 PM (IST)

மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து தமிழக வெற்றிக் கழகம் ஆர்ப்பாட்டம்!
வியாழன் 19, டிசம்பர் 2024 5:08:19 PM (IST)

