» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (கன்னியாகுமரி)

தமிழ் நாடகக் கலையின் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் பிறந்த நாள் விழா

திங்கள் 8, செப்டம்பர் 2025 10:15:09 AM (IST)

தமிழ் நாடகக் கலையின் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் 158வது பிறந்த தின விழா அவரது பிறந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் காட்டுநாயக்கன்பட்டியில் நடைபெற்றது.

இன்றைய நிகழ்வுகளுக்கு நா. திருமால் தலைமை தாங்கினார், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் மாவட்ட செயலாளர் சக்தி செல்லப்பா முன்னிலை வகித்தார். மிருதங்க கலைஞர் பிரகலாதன் வரவேற்புரையாற்றினார்.

ஜெக வீர கட்டபொம்மு தொடர்ந்து அவர்களும்......நாடகமும் சங்கரதாஸ் சுவாமிகளும் என்ற தலைப்பில் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்வியில் கல்லூரி நவீன நாடகத்துறை ஆசிரியர்.. முனைவர் D. நமசிவாயம் சிறப்புரையும், மற்றும் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் கோவில்பட்டி நகர துணைத்தலைவர் பாஞ்சை. கல்யாண் அவர்களும் கலந்து கொண்டார்கள். சங்கரதாஸ் சுவாமிகளின் படத்தினைதா. லிங்கையா திறந்து வைத்தார்கள். மாவட்ட இசைப்பள்ளி ஆசிரியர் குட்டி ராஜா வில்லிசை கலைஞர்கள் .லிங்கம்மாள் . லட்சுமி பாடகர்கள் நாடகக் கலைஞர் ராமர் . கிருஷ்ணமூர்த்தி முருகேசன் மகாராஜா சேகர் பாப்பையா ஆகியோர் பாடல்கள் பாட ஜெயக்குமார் அவர்களின் நன்றி உரையுடன் விழா இனிதே நிறைவு பெற்றது. ( பின் குறிப்பு ) இன்று கூடிய கலைஞர்கள் ஒன்றிணைந்து சங்கரதாஸ் சுவாமிகள் நாடக மன்றம் என்றஅமைப்பினை துவங்கி இருக்கிறார்கள்மாதந்தோறும் ஒரு நாள் காட்டுநாயக்கன்பட்டியில் சந்தித்து நாடக பயிற்சி மேற்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory