» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (கன்னியாகுமரி)
பத்தாம் வகுப்பு தேர்வில் சாலமோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சாதனை
வெள்ளி 10, மே 2024 5:47:02 PM (IST)
பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நாசரேத் சுற்றுவட்டாரத்தில் சால மோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.
பத்தாம் வகுப்பு மாணவி சுபிக்ஷா 489மதிப்பெண் பெற்று முதல் இடம் பிடித்துள்ளார். மேலும் இந்த மாணவி கணித பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார். மாணவி கரிஸ்மா 482 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.
மாணவி ஷெக்கினா 46 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளார். இவர்களை பள்ளி தாளாளர் ஜமீன் சாலமோன், நிர்வாகி பியூலா சாலமோன், கல்வி தலைவர் எலிசபெத் ரோஸ் பால், பள்ளி முதல்வர் ஜான்சி கனகராஜ், மற்றும் அனைத்து ஆசிரியர்களும் மாணவிகளை பாராட்டினர்.
M. Raja rokithமே 14, 2024 - 09:18:07 PM | Posted IP 162.1*****