» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் 2,144 பேருக்குப் பணி நியமன ஆணைகள்: முதல்வர் ஜோசப் விஜய் வழங்கினார்!

செவ்வாய் 14, ஜூலை 2026 5:55:43 PM (IST)

cmvijayappointment.jpg

தமிழகத்தில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள 751 உதவி மருத்துவ அலுவலர்கள் மற்றும் 1,393 சுகாதார ஆய்வாளர்களுக்குப் பணி நியமன ஆணைகளை முதல்வர் ஜோசப் விஜய் வழங்கியுள்ளார்.

சென்னை மாநிலக் கல்லூரியில் மருத்துவத் துறை சார்பில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் ஜோசப் விஜய் கலந்துகொண்டார். இவ்விழாவில், தேர்வு செய்யப்பட்ட 751 உதவி மருத்துவ அலுவலர்கள் மற்றும் 1,393 சுகாதார ஆய்வாளர்கள் என மொத்தம் 2,144 நபர்களுக்குப் பணி நியமன ஆணைகளை அவர் நேரடியாக வழங்கினார்.

தொடர்ந்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ரூ. 139.47 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 35 புதிய மருத்துவக் கட்டடங்களை அவர் திறந்து வைத்ததோடு, அங்குக் நிறுவப்பட்டுள்ள மருத்துவ உபகரணங்களின் பயன்பாட்டையும் தொடங்கிவைத்தார்.

அரசு மருத்துவமனைகளின் மேம்பாட்டிற்குப் பங்களிக்க விரும்பும் பெரு நிறுவனங்கள் (கார்ப்பரேட்கள்) மற்றும் பொதுமக்கள் எளிதாக நிதியுதவி அளிக்கும் வகையில், 'நலம் டிஎன்' (Nalam TN) என்ற புதிய இணையதளச் சேவையை முதல்வர் ஜோசப் விஜய் மக்களின் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தினார்.

இவ்விழாவில் பேசிய மருத்துவத் துறை அமைச்சர் அருண்ராஜ், பொதுமக்கள் தங்களது குடும்பத் திருமணங்கள் மற்றும் பிறந்தநாள் போன்ற வாழ்வியல் நிகழ்வுகளைக் கொண்டாடும் விதமாக 'நலம் டிஎன்' இணையதளம் வழியாக அரசு மருத்துவமனைகளுக்கு நன்கொடை வழங்கலாம் எனக் கேட்டுக்கொண்டார். நன்கொடையாளர்கள் தாங்கள் விரும்பும் குறிப்பிட்ட அரசு மருத்துவமையைத் தேர்ந்தெடுத்து நிதி வழங்கவும், அவ்வாறு பெறப்படும் நிதியின் பயன்பாட்டை வெளிப்படைத்ன்மையுடன் கண்காணிப்பதற்கும் இந்த இணையதளத்தில் உரிய வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் அருண்ராஜ் விளக்கமளித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory