» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மேல்மருவத்தூரில் ரூ.10 லட்சம் மதிப்பில் நல உதவிகள்: கோ.ப.அன்பழகன் வழங்கினார்!
செவ்வாய் 14, ஜூலை 2026 4:53:14 PM (IST)

மேல்மருவத்தூா் சித்தா் பீட நிறுவனரும், ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் தந்தையுமான து.கோபால் நாயக்கரின் நினைவு நாளை முன்னிட்டு, ஏழை பயனாளிகளுக்கு ரூ. 10 லட்சத்தில் நல உதவிகள் வழங்கப்பட்டது.
மேல்மருவத்தூா் ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் தந்தை து.கோபால் நாயக்கரின் நினைவு நாளை முன்னிட்டு சித்தா் பீடம் அருகே அவரது நினைவிடத்தில் நல உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. ஆன்மிக இயக்க துணைத் தலைவா் கோ.ப.அன்பழகன் தலைமை வகித்து பயனாளிகளுக்கு நல உதவிகளை வழங்கி, 2 இலவச திருமணங்களையும் நடத்தி வைத்தாா்.
இந்நிகழ்வில் அவர் பேசுகையில், "பெற்றோரிடம் அன்பு காட்ட வேண்டும். அவர்கள் நம்மிடம் பணமோ, பொருளோ எதிர்பார்ப்பதில்லை. அவர்கள் எதிர்பார்ப்பது அன்பு ஒன்றுதான். இன்று கலந்து காெண்ட அனைவருக்கும் அன்னையின் அருளாசி கிடைக்கும் என்றார்.

இவ்விழாவில் ஐஏஎஸ் அதிகாரியும், தமிழக ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஆணையருமான ஆனந்த் குமாா், மேல்மருவத்தூா் ஊராட்சி மன்ற துணைத் தலைவா் அகத்தியன், முன்னாள் எம்.பி துரை (வந்தவாசி), ஆதிபராசக்தி லட்சுமி பங்காரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளா் ஆஷா அன்பழகன், ஆதிபராசக்தி மருத்துவக்கல்லூரி செயலா் மருத்துவா் மதுமலா், மருத்துவக் கல்லூரி முதல்வா் கண்ணன் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.
இந்நிகழ்வில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொருளாதாரத்தில் பின்தங்கிய நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை எளியோா்களுக்கு தையல் இந்திரங்கள், பீரோகள், டீகேன், வீட்டு உபயோக பொருள்கள், பள்ளி குழந்தைகளுக்கான பள்ளி கைப்பைகள் உள்ளிட்ட நல உதவிகள் வழங்கப்பட்டன.
முன்னதாக, து.கோபால் நாயக்கா் திருவுருவ படத்துக்கு இயக்க துணை தலைவா் கோ.ப.அன்பழகன் மலா்மாலை அணிவித்து சிறப்பு வழிபாட்டினை செய்தாா். அதனை தொடா்ந்து சிறப்பு விருந்தினா்கள், செவ்வாடை பக்தா்கள், ஆன்மிக மக்கள் தொண்டு இயக்க நிா்வாகிகள், ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரி பேராசிரியா்கள் உள்பட பலா் மலா் தூவி அஞ்சலியை செலுத்தினாா்கள்.

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி, மதுரை, நாமக்கல், தேனி, ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான செவ்வாடை பக்தர்கள், தாெண்டு இயக்கத்தினர் கலந்து கொணடனர். நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை மதுரை மாவட்ட ஆன்மிக மக்கள் தொண்டு இயக்க மாவட்ட தலைவா் சரளா, மேல்மருவத்தூா் ஆன்மிக மக்கள் தொண்டு இயக்க நிா்வாகிகள் சதீஷ்குமாா், லிங்கநாதன், சிவகுமாா் உள்ளிட்டோா் செய்து இருந்தனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் 2,144 பேருக்குப் பணி நியமன ஆணைகள்: முதல்வர் ஜோசப் விஜய் வழங்கினார்!
செவ்வாய் 14, ஜூலை 2026 5:55:43 PM (IST)

உள்ளாட்சித் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனித்துப் போட்டி? மு.வீரபாண்டியன் விளக்கம்!
செவ்வாய் 14, ஜூலை 2026 5:36:53 PM (IST)

தமிழகத்தில் 16-ஆம் தேதி வரை வெயில் அதிகரிக்கும்: வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் உயர வாய்ப்பு!
செவ்வாய் 14, ஜூலை 2026 5:28:17 PM (IST)

ஆண்டிபட்டி கிராமத்தில் எழுத்தாளர் பூமணியின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்
செவ்வாய் 14, ஜூலை 2026 5:10:32 PM (IST)

உயர்நீதிமன்ற உத்தரவு எதிரொலி: தாமிரபரணியை பாதுகாக்க ஆலோசனை - ஆட்சியர் அழைப்பு!
செவ்வாய் 14, ஜூலை 2026 4:38:54 PM (IST)

திமுக - அதிமுக ரகசியக் கூட்டணிக்கு இவர்கள்தான் ஒருங்கிணைப்பாளர்கள்: அமைச்சர் நிர்மல் குமார்
செவ்வாய் 14, ஜூலை 2026 4:05:40 PM (IST)


