» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆண்டிபட்டி கிராமத்தில் எழுத்தாளர் பூமணியின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

செவ்வாய் 14, ஜூலை 2026 5:10:32 PM (IST)

Poomanianjali.jpg

தூத்துக்குடி மாவட்டம், ஆண்டிபட்டி கிராமத்தில் சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த தமிழ் எழுத்தாளர் பூமணியின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த தமிழ் எழுத்தாளர் பூமணி, வயோதிகம் மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் சென்னையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 79. பூமணியின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கும் கரிசல் வட்டார வாசகர்களுக்கும் ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகக் கருதப்படுகிறது. அவரது மறைவுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு எழுத்தாளர்களும், திரையுலகினரும், வாசகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்தனர்.

இந்தநிலையில் மறைந்த எழுத்தாளர் பூமணியின் இறுதி பயணத்துக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என முதல்-அமைச்சர் விஜய் அறிவித்தார். மேலும், பூமணியின் மறைவு தமிழ் இலக்கிய உலகுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும். உறவினர், நண்பர்களுக்கும், தமிழ் இலக்கியவாதிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்', என்றும் தெரிவித்தார்.

இந்தநிலையில், பூமணியின் உடல் இன்று நண்பகல் 12 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர், சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம், இளையரசனேந்தல் அருகேயுள்ள ஆண்டிபட்டி கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.அங்கு அவரது தோட்டத்தில் பிற்பகல் 2 மணிக்கு இறுதிச் சடங்குகள் நடந்தது.

பூமணி உடலுக்கு அவரது குடும்பத்தினர் இறுதிச் சடங்குகள் செய்த நிலையில், காவல்துறை அணிவகுப்புடன் 30 குண்டுகள் முழங்க, அரசு மரியாதையுடன் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory