» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தவெகவை ஆட்சி அமைக்க அழைக்காத ஆளுநரைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 8, மே 2026 3:13:26 PM (IST)

தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரியும், மத்திய அரசு மற்றும் ஆளுநரைக் கண்டித்தும் கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
2026 சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சி அமைக்க அழைக்காமல், அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிராகச் செயல்படும் மத்திய பாஜக அரசு மற்றும் ஆளுநரைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அறிவிப்பின்படி, கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சியினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பெருமாள்சாமி தலைமை தாங்கினார். நகரத் தலைவர் அருண்பாண்டியன் மற்றும் கோவில்பட்டி ஒன்றியத் தலைவர் ரமேஷ்மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேர்தலில் 108 இடங்களைப் பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சி அமைக்க விடாமல் தடுப்பதும், ஆளுநர் மத்திய அரசின் கைப்பாவையாகச் செயல்படுவதும் மக்களாட்சிக்கு எதிரானது என்று ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளர் ஐஎன்டியூசி ராஜசேகர், பிசிசி உறுப்பினர்கள் மகேஷ்குமார், உமாசங்கர் மற்றும் வழக்கறிஞர் அய்யலுசாமி, இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜான் பிரிட்டோ பெத்துராஜ், மாவட்டச் செயலாளர் துரைராஜ். வட்டாரத் தலைவர்கள் ஜேம்ஸ் லாரன்ஸ், போத்திராஜ், யோகேஷ் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த ஒன்றியச் செயலாளர் சக்தி கருப்பு, ஒன்றியத் துணைத் தலைவர் கனகராஜ் உள்ளிட்ட தவெக நிர்வாகிகளும் பங்கேற்றுத் தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர். மத்திய அரசு உடனடியாக அரசியல் சாசனத்தின்படி செயல்பட்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தனிப்பெரும் கட்சியை ஆட்சி அமைக்க அனுமதிக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழக அரசியலில் மீண்டும் ஒரு புதிய திருப்பம்: விஜய்க்கு இடதுசாரி கட்சிகள் ஆதரவு
வெள்ளி 8, மே 2026 3:59:57 PM (IST)

காங்கிரஸ் கட்சியினரை விரட்டியடித்த திமுகவினர் - தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு!
வெள்ளி 8, மே 2026 3:48:25 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி பள்ளி சாதனை: பிளஸ் 2 தேர்வில் 6-வது முறையாக 100% தேர்ச்சி!!
வெள்ளி 8, மே 2026 3:09:43 PM (IST)

விஜய் ஆட்சி அமைக்க அழைக்க வலியுறுத்தல்: த.வெ.க பெண் நிர்வாகிகள் உண்ணாவிரதம்!
வெள்ளி 8, மே 2026 12:05:34 PM (IST)

வீரசக்கதேவி ஆலய விழா: இளைஞர்களின் ஜோதி ஓட்டம்!
வெள்ளி 8, மே 2026 11:43:41 AM (IST)

எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி : திமுக ஆதரவா? ஸ்டாலின் ஆலோசனை!
வெள்ளி 8, மே 2026 11:35:06 AM (IST)


