» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி மாநகராட்சி பள்ளி சாதனை: பிளஸ் 2 தேர்வில் 6-வது முறையாக 100% தேர்ச்சி!!

வெள்ளி 8, மே 2026 3:09:43 PM (IST)



பிளஸ் 2 பொதுத்தேர்வில் தூத்துக்குடி சாமுவேல் புரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி தொடர்ந்து 6-வது முறையாக நூறு சதவீத தேர்ச்சியைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

இப்பள்ளியில் பயின்ற மாணவி டேனிகா மேத்யூ 600-க்கு 569 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இவர் இதே பள்ளியில் வேதியியல் ஆசிரியையாகப் பணியாற்றும் . பிளோரிடா மற்றும் புன்னக்காயல் புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்  ஜெபசிங் ஆகியோரின் மகள் ஆவார்.

மாணவன் மாரி சரண் 568 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துப் பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளார். இவரது தந்தை  ஆறுமுகநாதன் ஒரு டெக்கரேஷன் கடையில் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளியின் சாதனை குறித்துத் தலைமையாசிரியை ரூஃபினா ரொட்ரிகா கூறியதாவது: "கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் இப்பள்ளி தொடர்ந்து 6-வது முறையாக 100 சதவீத தேர்ச்சியைப் பெற்று வருகிறது. ஆசிரியர்களின் கடின உழைப்பும், மாணவ-மாணவியரின் முழு ஒத்துழைப்புமே இந்த வெற்றிக்குக் காரணம். பள்ளியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் மாநகராட்சி மேயர், ஆணையர் மற்றும் அதிகாரிகளுக்கும், இறைவனின் கிருபைக்கும் எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாநகராட்சி பள்ளி தொடர்ந்து சாதனை படைத்து வருவது அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory