» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி : திமுக ஆதரவா? ஸ்டாலின் ஆலோசனை!

வெள்ளி 8, மே 2026 11:35:06 AM (IST)

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் விரைவில் ஆட்சி அமையும் என்று தம்பிதுரை கூறினார்.

பசுமை வழிச்சாலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தபின் எம்பி தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் விரைவில் ஆட்சி அமையும்.

மக்களுக்கான நல்லாட்சியை இபிஎஸ் தருவார். ஆலோசனை நடந்து கொண்டிருக்கிறது. கடவுள் ஆசிர்வாதத்தில் நல்லதே நடக்கும். தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக தொடர்கிறதா என்ற கேள்விக்கு பதில் கூற மறுப்பு தெரிவித்தார்.

திமுக ஆதரவா? ஸ்டாலின் ஆலோசனை!

திமுக தலைவர் ஸ்டாலின் சட்ட வல்லுநர்களுடன் அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் ஆ.ராசா, என்.ஆர்.இளங்கோ, பி.வில்சன், கனிமொழி, பொன்முடி, எ.வ.வேலு, டி.ஆர்.பாலு, கே.என்.நேரு உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். இதனால் அதிமுக ஆட்சி அமைக்க திமுக ஆதரவு அளிக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


மக்கள் கருத்து

Balaமே 8, 2026 - 12:06:44 PM | Posted IP 162.1*****

Appadi yellam nadakka vaipe illai

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory