» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள்: தமிழகத்தில் 95.20 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி!
வெள்ளி 8, மே 2026 11:09:05 AM (IST)
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. அதன்படி மொத்தம் 7.53 லட்சம் மாணவர்கள் (95.20 சதவீதம்) தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 4,06,167 பேர் (97 சதவீதம்). தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 3, 47, 527 பேர் (93.19 சதவீதம்)
இந்த முறையும் வழக்கம்போலவே தேர்ச்சி விகிதத்தில் மாணவிகளே அதிகம் இடம்பெற்றுள்ளனர். மாணவர்களை விட 3.81 சதவீதம் அதிகமாக மாணவிகள் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். இந்த தேர்வில் பங்கெடுத்த மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 7,536. இதில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள் 2,639. இதில் அரசுப் பள்ளிகள் 489.
தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு, சிவகங்கை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் முதல் 3 இடங்களைப் பெற்றுள்ளன.
ஈரோடு - 98.87 சதவீதம்
சிவகங்கை - 98.05 சதவீதம்
கன்னியாகுமரி - 97.63 சதவீதம்
நெல்லை - 97.54 சதவீதம்
திருச்சி - 97 சதவீதம்
கடந்த ஆண்டை போலவே இந்தாண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகம்பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிக மாணவர்கள் சதம் அடித்த பாடங்களில் கணினி அறிவியல் முதலிடத்தில் உள்ளது.
தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, results.digilocker.gov.in இணையதளங்களில் சென்று பார்க்கலாம். மேலும் பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் அறிந்து கொள்ளலாம். இதுதவிர பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்ட செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி வாயிலாக தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 13-ம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று தேர்வுத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அதைபோல தேர்வில் வெற்றி பெறாதவர்களுக்கு ஜூன் 28 முதல் ஜூலை 7 வரை துணைத்தேர்வுகள் நடைபெறும் என அறிவித்துள்ளனர். பிஎம்ஸ்ரீ திட்டம் குறித்து மத்திய அரசு கடிதம் எதுவும் அனுப்பவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தவெகவை ஆட்சி அமைக்க அழைக்காத ஆளுநரைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 8, மே 2026 3:13:26 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி பள்ளி சாதனை: பிளஸ் 2 தேர்வில் 6-வது முறையாக 100% தேர்ச்சி!!
வெள்ளி 8, மே 2026 3:09:43 PM (IST)

விஜய் ஆட்சி அமைக்க அழைக்க வலியுறுத்தல்: த.வெ.க பெண் நிர்வாகிகள் உண்ணாவிரதம்!
வெள்ளி 8, மே 2026 12:05:34 PM (IST)

வீரசக்கதேவி ஆலய விழா: இளைஞர்களின் ஜோதி ஓட்டம்!
வெள்ளி 8, மே 2026 11:43:41 AM (IST)

எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி : திமுக ஆதரவா? ஸ்டாலின் ஆலோசனை!
வெள்ளி 8, மே 2026 11:35:06 AM (IST)

பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை விவரம்!!
வெள்ளி 8, மே 2026 11:25:40 AM (IST)


