» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

காங்கிரஸ் கட்சியினரை விரட்டியடித்த திமுகவினர் - தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு!

வெள்ளி 8, மே 2026 3:48:25 PM (IST)

மயிலாடுதுறையில் ஆளுநரைக் கண்டித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை, திமுகவினர் விரட்டியடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, 108 இடங்களைப் பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சி அமைக்க அழைக்க வலியுறுத்தி, காங்கிரஸ் கட்சியினர் மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, மயிலாடுதுறையிலும் ஆளுநரின் செயல்பாடுகளைக் கண்டித்துக் காங்கிரஸ் கட்சியினர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் கட்சியினர் தங்கள் போராட்டத்தை முடித்துக் கொண்டு திரும்பிச் சென்றபோது, அங்கு திரண்ட திமுகவினர் திடீரென அவர்களை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாகவும், ஆளுநரை வலியுறுத்தியும் காங்கிரஸ் குரல் கொடுப்பதைக் கண்டித்து திமுகவினர் ஆக்ரோஷமாக முழக்கமிட்டனர். ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், திமுகவினர் காங்கிரஸ் கட்சியினரை அங்கிருந்து விரட்டியடித்தனர்.

நீண்டகால நண்பர்களாக இருந்த திமுக - காங்கிரஸ் தொண்டர்களுக்கு இடையே பொது இடத்தில் ஏற்பட்ட இந்த மோதல் மயிலாடுதுறையில் பெரும் பதற்றத்தை உருவாக்கியது. தமிழக அளவில் திமுக - காங்கிரஸ் கூட்டணி முறிந்துள்ள நிலையில், அடிமட்டத் தொண்டர்களிடையே நிலவும் இந்த நேரடி மோதல், வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory