» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பேருந்து ஓட்டுநர்களின், பயண நேரக் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்: ஜி.கே. வாசன் வலியுறுத்தல்!

திங்கள் 1, டிசம்பர் 2025 11:58:49 AM (IST)

சமீபமாக பேருந்து விபத்துக்கள் அதிகரித்து வரும் நிலையில், பேருந்து ஓட்டுநர்களின், பயண நேரக் கட்டுப்பாடுகளை அரசு போக்குவரத்து நிறுவனங்கள் தளர்த்த வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளார்கள். மேலும் 40 பேர்கள் காயமடைந்துள்ளது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. காரைக்குடி திருப்பத்தூர் சாலையில் பிள்ளையார்ப்பட்டி அருகே காங்கேயத்தில் இருந்து காரைக்குடிக்கும், காரைக்குடியில் இருந்து திண்டுக்கல்லுக்கும் சென்ற அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிகொண்டதில் ஏற்பட்ட விபத்தில் 9 பெண்கள் உள்பட 11 பேர் உயிரிழந்துள்ளது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

ஏழை, எளிய மக்கள் அதிகமாக அரசு போக்குவரத்து பேருந்துகளையை நாடுகிறார்கள். வருங்காலங்களில் அவர்களின் பாதுகாப்பான பயணத்திற்கு அரசு வழிவகுக்க வேண்டும் வாகனங்களை இயக்குபவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். சமீபமாக பேருந்து விபத்துக்கள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.

அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு பயண நேரக் கட்டுப்பாடுகளை அரசு போக்குவரத்து நிறுவனங்கள் தளர்த்த வேண்டும். இதனால் அதிகமான விபத்துகள் ஏற்பட காரணமாக அமைகிறது. ஒட்டுநர்கள் வாகனத்தை கவனத்துடன் இயக்க உரிய வழிக்காட்டுதல்களை, கோட்பாடுகளை அரசு வழங்க வேண்டும். விபத்தில் உயரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவபவர்கள் குணமடைந்து விரைவில் வீடுதிரும்ப எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன் .

அரசு பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தமிழக அரசு அறிவித்த நிவராணம் தொகை போதுமானதாக இல்லை, அவற்றை 10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். மேலும் காயமுற்று சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory