» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பஸ் ஏற முயன்ற பெண் பயணியிடம் ரூ.10 ஆயிரம் திருட்டு: மாமியார், மருமகள் கைது!

திங்கள் 1, டிசம்பர் 2025 8:26:43 AM (IST)

சங்கரன்கோவில் பஸ் நிலையத்தில் பஸ் ஏற முயன்ற பெண் பயணியிடம் இருந்து ரூ.10 ஆயிரம் திருடிய கோவில்பட்டியைச் சேர்ந்த மாமியார், மருமகளை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் புது மந்தை தெருவை சேர்ந்தவர் மாரிச்சாமி. இவரது மனைவி முப்புடாதி (28). இவர் சம்பவத்தன்று சங்கரன்கோவில் பஸ் நிலையத்தில் பஸ் ஏற முயன்றார். அப்போது அவர் பையில் வைத்திருந்த ரூ.10 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றுவிட்டனர்.இதனால் அதிர்ச்சியடைந்த முப்புடாதி இதுகுறித்து சங்கரன்கோவில் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பிரபா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுவாமி மற்றும் போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது பஸ்சில் ஏறமுயன்ற முப்புடாதியிடம் 2 பெண்கள் திருடுவதுபோன்ற காட்சிகள் பதிவாகியிருந்தது. அதனடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

அதில் அந்த பெண்கள், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்தித்தோப்பு ராஜகோபால் நகரை சேர்ந்த சுகுமாரன் மனைவி வேலம்மாள் (50) மற்றும் அவரது மருமகள் தனலட்சுமி (20) என்பது தெரியவந்தது. உடனடியாக அவர்களின் வீட்டுக்கு விரைந்து சென்ற போலீசார் அங்கிருந்த வேலம்மாள், தனலட்சுமியை அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரத்தையும் மீட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory