» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி விமானங்கள் வழக்கம்போல் இயக்கம்!

திங்கள் 1, டிசம்பர் 2025 8:29:22 AM (IST)

சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி விமானங்கள் வழக்கம்போல் இயக்கப்படுகின்றன. 

‘தித்வா’ புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் தூத்துக்குடி, திருச்சி, மதுரை, சேலம், யாழ்ப்பாணம், கொழும்பு உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் விமானங்கள், வரும் விமானங்கள் என 47 வருகை மற்றும் புறப்பாடு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்தநிலையில் மழையின் வேகம் ஓரளவு குறைந்ததோடு, இந்திய வானிலை ஆய்வு மையம் திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு மட்டுமே சிவப்பு எச்சரிக்கை விடுத்து இருந்தது. 

இதையடுத்து நேற்று சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மதுரை, திருச்சி, தூத்துக்குடி, சேலம் உள்ளிட்ட விமானங்கள் வழக்கம் போல் இயங்கத் தொடங்கின. ஆனால் சென்னை -யாழ்ப்பாணம்-சென்னை ஆகிய 2 விமானங்கள் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory