» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நெல்லை வருகை தந்த ஆடவர் ஹாக்கி இளையோர் உலக கோப்பைக்கு உற்சாக வரவேற்பு
புதன் 12, நவம்பர் 2025 4:33:40 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்திற்கு வருகைதந்த 2025 ஆம் ஆண்டிற்கான 14-வது ஆடவர் ஹாக்கி இளையோர் உலக கோப்பையினை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத்தலைவர் மு.அப்பாவு வரவேற்று, காட்சிப்படுத்தினார்.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தின் உள்விளையாட்டரங்கில் இன்று (12.11.2025) நடைபெற்ற நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்டத்திற்கு வருகை தந்த 2025-ஆம் ஆண்டிற்கான 14-வது ஆடவர் ஹாக்கி இளையோர் உலக கோப்பையினை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத்தலைவர் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சியர் மரு.இரா.சுகுமார், தலைமையில், துணை மேயர் கே.ஆர்.ராஜூ முன்னிலையில் வரவேற்று, காட்சிப்படுத்தினார்கள்.
2025ஆம் ஆண்டுக்கான ஆண்கள் FIH ஹாக்கி ஜூனியர் உலகக்கோப்பை சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பால் நடத்தப்படுகிறது. 21 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான போட்டிகள் நடைபெறுகிறது. இப்போட்டியானது 14வது ஆடவர் ஹாக்கி இளையோர் உலக கோப்பையாகும். ஹாக்கி விளையாட்டில் முன்னணி வகிக்கின்ற இந்தியா, அர்ஜென்டினா, சீனா. நியூசிலாந்து பிரான்சு, ஆஸ்திரேலியா, கொரியா, ஜெர்மினி ஆகிய நாடுகள் உள்ளிட்ட 24 நாடுகள் கலந்து கொள்ளும் ஆண்களுக்கான ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டிகள் நவம்பர் 28 முதல் டிசம்பர் 10, 2025 வரை இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள சென்னை மற்றும் மதுரையில் நடைபெறுகிறது.
போட்டியின் சாராம்சம்: முதல்முறையாக 24 அணிகள் பங்கேற்கிறது. ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா 2001 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் தங்கப்பதக்கங்களையும் 1997-இல் வெள்ளி பதக்கத்தையும் வென்றுள்ளது .
இப்போட்டியில் வெற்றி பெறும் அணிக்கான உலக கோப்பையை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அறிமுகம் செய்வதற்கான வாகனகுழு பயணத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நவம்பர் 10-ஆம் தேதி அன்று சென்னையில் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.
அதன் ஒரு பகுதியாக, இன்றையதினம் பாளையங்கோட்டை வ.உ.சி உள்விளைட்டரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத்தலைவர் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சியர் மரு.இரா.சுகுமார், தலைமையில், 14-வது ஆடவர் ஹாக்கி இளையோர் உலக கோப்பையினை அறிமுகப்படுத்தி, போட்டியின் சின்னமான காங்கேயனை காட்சிப்படுத்தினார்கள்.
அதனைத்தொடர்ந்து, அம்பாசமுத்திரம் வேல்ஸ் வித்யாலயா பள்ளியிலும் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில், மண்டல முதுநிலை மேலாளர் சிவா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் கிருஷ்ணசக்கரவர்த்தி, கபடி அர்ஜுனா விருது பெற்ற வீரர் மனத்தி கணேசன், சர்வதேச கைப்பந்து வீரர் சிவராஜன், சர்வதேச தடகளம் வீரர் ரோசிட்டோ சாக்ஸ், சர்வதேச தடகளம் வீராங்கனை எட்வினா ஜெய்சன், கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி துணைத்தலைவர் க.இசக்கிபாண்டி, நம்பி உட்பட அரசு அலுவலர்கள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தைப்பூச இருமுடி விழா: மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் 57 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்கும்!
ஞாயிறு 16, நவம்பர் 2025 1:28:56 PM (IST)

கனமழை எச்சரிக்கை: நெல்லை-தூத்துக்குடி உள்பட 10 மாவட்டங்களுக்கு விரைந்த பேரிடர் மீட்பு படை
ஞாயிறு 16, நவம்பர் 2025 11:41:16 AM (IST)

நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் : பெண் சிக்கினார்
ஞாயிறு 16, நவம்பர் 2025 11:39:41 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு: 2,632 பேர் எழுதினர்; 404 பேர் வரவில்லை!
ஞாயிறு 16, நவம்பர் 2025 11:32:55 AM (IST)

நெல்லையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் ருசிகரம் : தந்தையும் மகனும் தேர்வெழுதினர்!!
ஞாயிறு 16, நவம்பர் 2025 11:13:11 AM (IST)

மாநில வில் வித்தை போட்டி: வீரவநல்லூர் மாணவனுக்கு தங்கப்பதக்கம் வென்று அசத்தல்
ஞாயிறு 16, நவம்பர் 2025 11:09:21 AM (IST)


.gif)