» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் : பெண் சிக்கினார்

ஞாயிறு 16, நவம்பர் 2025 11:39:41 AM (IST)

நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவத்தில் பெண் சிக்கினார்

நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு ‘இ-மெயில்' மூலமாக ஏற்கனவே 4 முறை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இந்தநிலையில் நேற்று சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறை எண்ணில் பேசிய மர்ம பெண் ஒருவர், போயஸ்கார்னிடல் உள்ள ரஜினிகாந்த் வீட்டில் குண்டுவெடிக்க போவதாக கூறினார். 

அதேபோல் சினிமா இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் வீட்டிலும் குண்டு வெடிக்க போகிறது என்று கூறிவிட்டு அந்த பெண் போனை வைத்துவிட்டார். இதுதொடர்பாக போலீசார் அதிரடி விசாரணை நடத்தினார்கள். போனில் பேசி மிரட்டல் விடுத்த பெண்ணின் பெயர் ராதா (வயது 34) என்றும், சென்னை அயனம்பாக்கத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.

ராதாவை பிடித்து வந்து போலீசார் விசாரித்தார்கள். விசாரணையில் அவர், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்தது. அவரை கீழ்ப்பாக்கம் அரசு மனநல ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சையளிக்க போலீசார் ஏற்பாடு செய்தனர். நேற்று டி.ஜி.பி. அலுவலகத்துக்கு வழக்கம் போல் வந்த மிரட்டல் இ-மெயில் கடிதத்தில், மயிலாப்பூரில் உள்ள சாய்பாபா கோவிலில் குண்டுவெடிக்க போவதாக கூறப்பட்டிருந்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சோதனை நடத்தி, மிரட்டல் வெறும் புரளி என்பதை உறுதிப்படுத்தினார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory