» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் ருசிகரம் : தந்தையும் மகனும் தேர்வெழுதினர்!!

ஞாயிறு 16, நவம்பர் 2025 11:13:11 AM (IST)



நெல்லையில் ஆசிரியர் தகுதித் தேர்வை தந்தையும், மகனும் எழுதிய ருசிகரம் நிகழ்ந்துள்ளது. 

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்தவர் உமர் பாரூக். அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி வருகிறார். அண்மையில் மத்திய அரசு கொண்டு வந்த கல்வி தொடர்பான சட்டத்தின் படி, தற்போது பணியில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் தகுதித் தேர்வை எழுத வேண்டும் என்று நீதிமன்றம் கூறியிருந்தது. 

இதன் படி தற்போது பணியில் இருக்கும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பணி தேடுபவர்கள் பி.எட். பயிலும் மாணவர்கள் என லட்சக்கணக்கானவர்கள் இன்று மாவட்டத் தலைநகரங்களில் உள்ள தேர்வு மையங்களில் தேர்வெழுதினர். இத்தேர்வில் ஆசிரியரான உமர் பாரூக், தற்போது ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் பயிலும் அவர் தம் மகன் தானிஷ் ஆகிய இருவரும் தேர்வெழுதினர்.

இந்த ஆசிரியர் பணிபுரியும் பள்ளியில், இம்மாணவர் பத்தாம் வகுப்பு பயின்ற போது  வகுப்பாசிரியராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிரியர் பணியைத் தக்க வைக்க தந்தையும், ஆசிரியர் பணியைப் பெற மகனும் ஒரே நேரத்தில் தேர்வெழுதியது,"தந்தை மகற்காற்று நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்" என்னும் திருக்குறளை நினைவூட்டியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory