» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தென்காசி கோவில் கும்பாபிஷேகம் நடத்த தடை இல்லை: உயர்நீதிமன்றம் உத்தரவு!
வெள்ளி 4, ஏப்ரல் 2025 3:19:01 PM (IST)

தென்காசி காசி விசுவநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம் வரும் ஏழாம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தன. இந்நிலையில் தென்காசியைச் சேர்ந்த நம்பிராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கோவிலில் திருப்பணிகள் முறையாக நடக்கவில்லை என்றும் அதில் முறைகேடுகள் நடந்திருப்பதால் முழுமையான பணிகள் நடந்த பின்னரே கும்பாபிஷேகம் நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் முறைகேடுகளில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை நேற்று நீதிபதிகள் நிஷாபானு, ஸ்ரீமதி அமர்வு விசாரணை செய்து கும்பாபிஷேகத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டதுடன் வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் பட்டியலிடப்பட்டு விசாரணைக்கு வந்தது. இதில் அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜரானார்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மூத்த வழக்கறிஞருமான டி எஸ் ஆர். வேங்கட ரமணாவும் இந்த வழக்கில் ஆஜரானார். கும்பாபிஷேகம் நடத்துவதற்காக பணிகள் பூர்த்தியடைந்து யாகசாலை பூஜைகளும் துவக்கப்பட்டு விட்டது. இந்நிலையில் கும்பாபிஷேகத்தை தடை செய்வது சரியாக இருக்காது என்று வாதிடப்பட்டது. இதையடுத்து கும்பாபிஷேகம் நடத்த விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை உத்தரவை நீக்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சத்துணவுத் திட்டத்தில் காலிப் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் : விண்ணப்பங்கள் வரவேற்பு
வியாழன் 10, ஏப்ரல் 2025 5:24:33 PM (IST)

பள்ளியில் மாணவியை தனியாக அமர வைத்த சம்பவம்: கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை!
வியாழன் 10, ஏப்ரல் 2025 3:51:34 PM (IST)

ம.சு. பல்கலைக்கழகத்தில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை: பேராசிரியர் மீது புகார்
வியாழன் 10, ஏப்ரல் 2025 3:23:38 PM (IST)

வீரபாண்டி ஆறுமுகம் குடும்பத்தினரை விடுவித்த உத்தரவு ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு!
வியாழன் 10, ஏப்ரல் 2025 12:40:52 PM (IST)

பாமக தலைவர் பதவியிலிருந்து அன்புமணி நீக்கம்: ராமதாஸ் அறிவிப்பு
வியாழன் 10, ஏப்ரல் 2025 12:18:58 PM (IST)

தமிழில் பாடங்கள் எண்ணிக்கை குறைப்பு: பள்ளிக்கல்வித் துறை திட்டம்!
வியாழன் 10, ஏப்ரல் 2025 10:58:45 AM (IST)
