» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சத்துணவுத் திட்டத்தில் காலிப் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் : விண்ணப்பங்கள் வரவேற்பு
வியாழன் 10, ஏப்ரல் 2025 5:24:33 PM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் சத்துணவுத் திட்டத்தில் சமையல் உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கு நேரடி நியமனத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இனசுழற்சி வாரியான காலிப்பணியிட விவரம்:
அரசு மற்றும் சிறுபான்மையற்ற பள்ளிகள் - 40
1. ஆதிதிராவிடர் (அருந்ததியினர்) 3
2. ஆதிதிராவிடர் 12
3. பழங்குடியினர் 6
4. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் 21
5. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் முஸ்லீம்கள் 2
6. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் முஸ்லீம் தவிர 16
7. பொதுப்பிரிவு 19
மொத்தம் 79
இனசுழற்சி அல்லாத காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை
(சிறுபான்மை பள்ளிகள்) 40
மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 119
1. கல்வித்தகுதி:- விண்ணப்பதாரர்கள் 15.04.2025-ம் தேதியில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி பெற்றிருக்க வேண்டும்.
2. வயது வரம்பு:
பொதுப்பிரிவு மற்றும் தாழ்த்தப்பட்டோர் : 15.04.2025-ம் தேதியில் 21 வயது பூர்த்தியடைந்தும் 40 வயதிற்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்
பழங்குடியினர் : 15.04.2025-ம் தேதியில் 18 வயது பூர்த்தியடைந்தும் 40 வயதிற்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்
விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டோர் : 15.04.2025-ம் தேதியில் 20 வயது பூர்த்தியடைந்தும் 40 வயதிற்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்
3. விண்ணப்பதாரர்கள் அனைவரும் கட்டாயம் தமிழில் சரளமாக எழுதப் படிக்கத் தெரிந்தவராக இருக்க வேண்டும்.
4. கல்வித் தகுதி, இருப்பிடம், சாதி, விதவை / கணவரால் கைவிடப்பட்டோர் மற்றும் இதர முன்னுரிமைகள் கோருவதற்கான சான்றுகள் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.
5. நியமனம் கோரும் பணியிடத்திற்கும் விண்ணப்பதாரின் குடியிருப்புக்கும் இடையே உள்ள தூரம் 3 கிலோ மீட்டருக்குள் இருக்க வேண்டும். (ஊராட்சி / குக்கிராமம் / வருவாய் கிராமம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.)
6. ஆதரவற்ற விதவைகள் / ஆதரவற்ற பெண் / கணவரால் கைவிடப்பட்டடோருக்கான பணியிடங்கள் நிரப்பப்படும் போது 25 விழுக்காடு கணக்கீடு செய்து நிரப்பப்படும்.
7. மாற்றுத்திறனாளி ஒதுக்கீடு தொடர்பாக 4 விழுக்காடு பணியிடங்கள் அரசாணை(நிலை) எண்.32, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் (சந4-2) துறை, நாள்.12.03.2025-ன்படி, கீழ்கண்டவாறு பரிந்துரைத்துள்ளது.
• குறைவான பார்வைத்திறன் (மூக்குக்கண்ணாடி மூலம் சரி செய்யப்பட்டது)
• உடல் இயக்க குறைபாடு (ஒரு கால்)
• குணப்படுத்தப்பட்ட தொழுநோய் (40% கைகளின் முழு செயல்பாட்டுதிறன், உணர்திறன் மற்றும் செயல்திறன் உள்ளடக்கியது)
• திரவ வீச்சினால் பாதிக்கப்பட்டவர்கள்
• குறிப்பிட்ட கற்றல்திறன் குறைபாடு (மிதமான)
8. சமையல் உதவியாளர் காலிப்பணியிடத்திற்கான மாதிரி விண்ணப்பப் படிவம் திருநெல்வேலி மாவட்ட இணைய தளத்தில் (www.tirunelveli.nic.in) வெளியிடப்பட்டுள்ளது. மேற்படி, இணைய தளத்திலிருந்து சமையல் உதவியாளர் பணியிடத்திற்கான மாதிரி விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். (உரிய விண்ணப்ப படிவத்தில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பம் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.)
9. காலிப்பணியிடங்களின் விவரம், பணியிடங்களுக்கான இனசுழற்சி விவரம் மற்றும் மாதிரி விண்ணப்பப் படிவம் திருநெல்வேலி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியம் / மாநகராட்சி அலுவலக விளம்பர பலகையிலும் அறிவிப்பு செய்யப்படும்.
10 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், இருப்பிடம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, சாதி மற்றும் விதவை / கணவரால் கைவிடப்பட்டோருக்கான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து நேரிலோ அல்லது பதிவஞ்சலிலோ சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியம் / மாநகராட்சி அலுவலகங்களுக்கு 26.04.2025 பிற்பகல் 05.45 மணிக்குள் வந்து சேர வேண்டும். (ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர) 26.04.2025 பிற்பகல் 05.45 மணிக்குப் பின் நேரிலோ, பதிவஞ்சலிலோ பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
11 அஞ்சல் துறையின் மூலம் விண்ணப்பங்கள் அனுப்பப்படும் போது ஏற்படும் காலதாமதங்களுக்கு துறை பொறுப்பேற்காது.
12 நிரப்பப்பட உள்ள காலிப்பணியிடங்களுக்கு பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் அழைப்புக் கடிதம் பின்னர் அனுப்பப்படும். நேர்காணலுக்கு வரும்பொழுது அசல் நேர்காணல் அழைப்புக் கடிதம் மற்றும் அசல் சான்றுகள் தவறாது எடுத்து வரவேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் 2026லும் திராவிட மாடல் ஆட்சிதான்: முதல்வர் ஸ்டாலின் உறுதி!!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 3:56:05 PM (IST)

வீடுபுகுந்து மூதாட்டியிடம் நகை, பணம் பறிப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
வெள்ளி 18, ஏப்ரல் 2025 3:23:38 PM (IST)

மக்கள் தொடர்பு முகாமில் ரூ.89.75 இலட்சம் நலதிட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கினார்.
வெள்ளி 18, ஏப்ரல் 2025 12:45:53 PM (IST)

தமிழ் வழிக் கல்வியில் படித்தவர்களுக்கு 20 சதவீதம் முன்னுரிமை: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
வெள்ளி 18, ஏப்ரல் 2025 12:24:38 PM (IST)

திருப்பதிக்கு நிகராக திருச்செந்தூர் கோவில் வடிவமைப்பு : தமிழக முதல்வருக்கு சேகர்பாபு புகழாரம்
வெள்ளி 18, ஏப்ரல் 2025 8:58:07 AM (IST)

அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிவு: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
வியாழன் 17, ஏப்ரல் 2025 5:50:13 PM (IST)
