» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சிறுமியிடம் செல்போனில் ஆபாச படம் கேட்டு தொந்தரவு : கல்லூரி மாணவர் போக்சோவில் கைது

வியாழன் 10, ஏப்ரல் 2025 9:04:33 AM (IST)

செல்போனில் ஆபாச படம் அனுப்புமாறு 14 வயது சிறுமியிடம் தொந்தரவு செய்த கல்லூரி மாணவரை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே கண்ணநல்லூர் கீழ தெருவைச் சேர்ந்தவர் சின்னத்துரை (22). இவர் கல்லூரியில் பி.எஸ்சி. இறுதியாண்டு படித்து வருகிறார். இவர் நெல்லை அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியிடம் செல்போனில் பேசி பழகி வந்தார்.

இந்நிலையில் சின்னத்துரை, அந்த சிறுமியிடம் உனது நிர்வாண படத்தை செல்போனில் எடுத்து அனுப்புமாறு கூறி தொந்தரவு செய்து வந்தார். மேலும் அவர் இதுகுறித்து சிறுமியின் செல்போனுக்கும் வாட்ஸ்-அப் மூலம் தகவல் அனுப்பியிருந்தார். இதற்கிடையே சிறுமியின் செல்போனை அவருடைய தாயார் வாங்கி பார்த்தார். 

அப்போது நிர்வாண படம் அனுப்புமாறு சின்னத்துரை வாட்ஸ்-அப் மூலம் அனுப்பியிருந்த தகவலை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சிறுமியின் தாயார் சேரன்மாதேவி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சின்னத்துரையை கைது செய்தனர். சிறுமியிடம் நிர்வாண படம் அனுப்புமாறு தொந்தரவு செய்த கல்லூரி மாணவர் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory