» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து : 6 பேர் உயிரிழப்பு!
சனி 4, ஜனவரி 2025 11:22:54 AM (IST)
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
விருதுநகர் அருகே அப்பைநாயக்கன்பட்டி கிராமத்தில் கோட்டூர் பகுதியில் இயங்கிவரும் பட்டாசு ஆலையில் பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட வெடிவிபத்தில் அங்கு பணியில் இருந்த 6 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். பட்டாசுகள் வெடித்து சிதறியதில் 4 அறைகள் தரைமட்டமாகின.
வெடிவிபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த வெடிவிபத்தில் இறந்த 6 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. வேதிப்பொருட்கள் கலவையின்போது விபத்து நேர்ந்தது என்றும், விசாரணைக்கு பிறகே முழு தகவலும் தெரியவரும் என்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.