» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அனுமதியின்றி பெண்ணுக்கு கருத்தடை சாதனம் : இந்து முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம்!

ஞாயிறு 5, ஜனவரி 2025 9:41:43 PM (IST)



நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதியின்றி பெண்ணுக்கு கருத்தடை சாதனம் பொருத்திய மருத்துவர்களை கண்டித்து தூத்துக்குடியில் இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. 

திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குழந்தை பிரசவித்த பெண்ணுக்கு குடும்பத்தினரின் அனுமதி இல்லாமல் கருத்தடை சாதனம் பொருத்திய மருத்துவர்களின் அலட்சியத்தை கண்டித்து காவல்துறையில் புகார் அளித்த இந்து முன்னணி மாநிலச் செயலாளரும் வழக்கறிஞருமான குற்றாலநாதனை 10 நாட்கள் கழித்து பொய் வழக்கு புனைந்து காவல்துறை கைது செய்ததை கண்டித்தும், அவரை விடுவிக்க கோரியும் தூத்துக்குடியில் டூவிபுரத்தி் உள்ள இந்து முன்னணி காரியாலயத்தின் முன்பு மாநகர் மாவட்ட தலைவர் இசக்கி முத்துக்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் இந்து முன்னணி மாநகர துணைத் தலைவர் ஆதிநாத ஆழ்வார், பாஜக ஆன்மீக பிரிவு மாவட்ட தலைவர் ஓம் பிரபு, மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் நாகராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பலவேசம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கவி சண்முகம், மாநகர் மேற்கு மண்டல தலைவர் சுதாகர், ஒன்றிய தலைவர் முத்துகிருஷ்ணன், இந்து ஆட்டோ முன்னணி தொழிலாளர்கள் முன்னணி சங்கம் மாவட்ட துணைத் தலைவர் திருப்பதி வெங்கடேஷ், இந்து ஆட்டோ முன்னணி மாவட்ட இணை செயலாளர் சுரேஷ்குமார், பொறுப்பாளர்கள் வரதராஜ, பெருமாள், கணேசன், பரமசிவன், வெங்கடேஷ், கோபி, முருகராஜ் தங்க மாரியப்பன், முனியசாமி, சமூக ஆர்வலர் ராஜவேல் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory