» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அண்ணா பிறந்த நாள் சைக்கிள் போட்டி : ஆட்சியர் க.இளம்பகவத் துவக்கி வைத்தார்

சனி 4, ஜனவரி 2025 10:01:27 AM (IST)



தூத்துக்குடியில் அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மாணவ - மாணவியர்கள் கலந்து கொண்ட மிதிவண்டி போட்டியினை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தூத்துக்குடி மாவட்டப் பிரிவு சார்பில், அன்றாட வாழ்வில் உடற்தகுதியை பேணுவது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தவும், உடற்தகுதி கலாச்சாரத்தை இளைஞர்களிடையே புகுத்தும் விதமாக மாணவ/மாணவிகள் கலந்து கொண்ட மிதிவண்டி போட்டியினை தருவை விளையாட்டு மைதானத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், இன்று (04.01.2025) கொடியசைத்து துவக்கி வைத்தார். 

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த தினத்தை சிறப்புற கொண்டாடும் வகையில் அறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. 

போட்டிகளில் தூத்துக்குடி மாவட்ட பள்ளி மாணவ, மாணவியர்கள் சுமார் 160 நபர்கள் கலந்து கொண்டனர். 13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ, மாணவிகளுக்கு 10 கி.மீ., 15 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ., மாணவிகளுக்கு 15 கி.மீ. மற்றும் 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. மாணவிகளுக்கு 15 கி.மீ. என தனித்தனியாக மிதிவண்டி போட்டிகள் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், துணை காவல் கண்காணிப்பாளர் சி.மதன், மாவட்ட விளையாட்டு அலுவலர் அந்தோணி அதிஷ்டராஜ், போக்குவரத்து காவல் ஆய்வாளர்ளர் மயிலேறும் பெருமாள் மற்றும் பயிற்றுநர்கள், உடற்கல்வி இயக்குநர், ஆசிரியர்கள் கலந்துகொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory