» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்த 3 வயது குழந்தை உயிரிழப்பு

வெள்ளி 3, ஜனவரி 2025 5:02:40 PM (IST)

விக்கிரவாண்டியில்  தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து யு.கே.ஜி. படித்து வந்த 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை சேர்ந்த பழனிவேல்-சிவசங்கரி தம்பதியினரின் குழந்தை லியா லட்சுமி(3), அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் யு.கே.ஜி. படித்து வந்தார். இந்நிலையில், இன்று பள்ளியில் உணவு இடைவேளையின்போது பள்ளி வளாகத்திற்குள் உள்ள கழிவுநீர் தொட்டி அருகே விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. 

அந்த கழிவுநீர் தொட்டியின் மீது போடப்பட்டிருந்த இரும்பு தகடு துருபிடித்து இருந்த நிலையில், மூடி உடைந்து கழிவுநீர் தொட்டிக்குள் குழந்தை விழுந்துள்ளது. குழந்தை லியா லட்சுமி கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்ததை அறிந்து ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள் உடனடியாக குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory