» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழ்நாட்டில் பல பேய்களை ஓட்டவே இந்த வேதாளம் வந்திருக்கிறேன்: அண்ணாமலை
வியாழன் 11, ஜூலை 2024 4:51:14 PM (IST)
தமிழ்நாட்டில் உள்ள பல பேய்களை ஓட்டுவதற்குதான் இந்த வேதாளம் வந்துருக்கேன். இந்த பேயை முடித்துவிட்டு அடுத்த பேய்க்கு வருகிறேன் காத்திருங்கள் என்று தன்னை வேதாளம் என விமர்சித்த ஜெயகுமாருக்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.

மாவீரன் அழகுமுத்துக்கோன் திருவுருவச் சிலைக்கு, மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் சென்று, மலர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி வணங்கினோம்.நமது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, 2015 ஆம் ஆண்டு, மாவீரன் அழகுமுத்துக்கோனுக்கு தபால் தலை வெளியிட்டுப் புகழ் சேர்த்தது பெருமைக்குரியது. ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில், இறுதிவரை பின்வாங்காமல், அச்சமின்றிப் போரிட்ட மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களது வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறோம்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தன்னை வேதாளம் என விமர்சித்தது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தமிழ்நாட்டில் உள்ள பல பேய்களை ஓட்டுவதற்குதான் இந்த வேதாளம் வந்திருக்கிறேன். தமிழ்நாட்டில் பல பேய்கள் இருக்கிறது. இந்த வேதாளம் வந்ததே அந்த பேய்களை ஓட்டத்தான்.
ஒவ்வொரு பேயாக ஓட்டிக்கொண்டிருக்கிறேன். நிறைய பேய்கள் இருப்பதால் இந்த பேயை முடித்துவிட்டு அடுத்த பேய்க்கு வருகிறேன் காத்திருங்கள் என்று அண்ணாமலை பதிலளித்தார். அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு இருக்கிறதா என்ற ஒரு சந்தேகம் எழுகிறது. மக்களை பாதுகாக்க கூடிய கட்டமைப்பில் அரசு தோல்வி அடைந்துள்ளது என குற்றம்சாட்டினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மும்மொழி கொள்கை விவகாரம்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 5:48:24 PM (IST)

மூதாட்டியை கட்டி போட்டு 10 பவுன் தங்க நகை பறித்த மர்ம நபர்கள் : போலீஸ் தீவிர விசாரணை!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 5:44:32 PM (IST)

பா.ஜனதா ஆட்சி செய்தால் ஏழை எளிய மக்கள் வாழவே முடியாது: நெல்லையில் ப.சிதம்பரம் பேச்சு
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 5:33:34 PM (IST)

ஜெயலலிதாவின் 27 கிலோ நகைகள், 1562 ஏக்கர் சொத்து ஆவணங்கள் தமிழக அரசிடம் ஒப்படைப்பு
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 9:47:55 AM (IST)

சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஓட்டல் அதிபருக்கு அரிவாள் வெட்டு : 3பேர் கைது!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 9:39:59 AM (IST)

பைக்குகள் மோதல்: கல்லூரி முதல்வர், மாணவர் பலி; மேலும் ஒருவர் படுகாயம்!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 9:24:20 AM (IST)
