» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அ.தி.மு.க கொள்கை பரப்பு துணை பொதுச் செயலாளராக கவுதமி நியமனம்!

திங்கள் 21, அக்டோபர் 2024 5:10:26 PM (IST)



நடிகை கவுதமிக்கு அ.தி.மு.க கொள்கை பரப்பு துணை பொதுச்செயலாளர் என்ற பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

நடிகை கவுதமி, பாஜகவில் மாநில பொறுப்பில் இருந்து வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் பா.ஜ.க.வில் இருந்து விலகி, எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தன்னை அ.தி.மு.க.வில் இணைத்துக்கொண்டார். இதன் தொடர்ச்சியாக கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது அ.தி.மு.க.வுக்காக பல்வேறு தொகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டு வந்தார்.

இந்த நிலையில், கட்சியில் அவருக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் அ.தி.மு.க கொள்கை பரப்பு துணை பொதுச்செயலாளர் என்ற பொறுப்பு கவுதமிக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல, மேலும் சிலருக்கு கட்சியின் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத்தின் துணை செயலாளராக தடா பெரியசாமி நியமிக்கப்பட்டுள்ளார். கழக சிறுபான்மையினர் நலப்பிரிவு துணை செயலாளராக பாத்திமா அலியும், கழக விவசாயப்பிரிவு துணை செயலாளராக சன்னியாசியும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory