» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
என்ஜினியரிங் கட்-ஆப் குறைந்தது : கலந்தாய்வு 22ம் தேதி துவங்குகிறது!
வியாழன் 11, ஜூலை 2024 11:34:40 AM (IST)
தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு கலந்தாய்வு வருகிற 22-ந்தேதி தொடங்கி செப்டம்பர் 3-ம் தேதி வரை நடைபெறுகிறது.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 2024-25-ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது. கலந்தாய்வு வருகிற 22-ந்தேதி தொடங்கி செப்டம்பர் 3-ம் தேதி வரை நடைபெறுகிறது. முதலில் சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங் நடக்கிறது.
பொது கலந்தாய்வு 29-ந் தேதி தொடங்குகிறது. 2 லட்சம் மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பத்து உள்ளனர். அவர்களுக்கான தர வரிசை பட்டியல் நேற்று வெளியிடப் பட்டது. இதில் 65 மாணவர் கள் 200-க்கு 200 மதிப் பெண் பெற்று இருந்தனர். இது கடந்த ஆண்டை காட்டி லும் குறைவாகும்.
அதேபோல 195 கட்-ஆப் மார்க்கிற்கு மேல் பெற்றவர் களின் எண்ணிக்கை 2,862 ஆகும். கடந்த ஆண்டு 2,911 பேர் அதிக மதிப்பெண் பெற்று இருந்தனர். டாப் மார்க் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து உள்ளதாலும் பொறியியல் கல்லூரிகளில் இடங்களை அதிகரித்து இருப்பதாலும் டாப் கல்லூரிகளில் கட்-ஆப் மதிப்பெண் குறைகிறது.
கட்-ஆப் மார்க் ஒன்று வரை குறைய வாய்ப்பு இருப்பதாக கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக் கழக வளாக கல்லூரிகளில் கடந்த ஆண்டு 400-க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக இருந்தன. 4 வளாக கல்லூரிகளிலும் அனு மதிக்கப்பட்ட இடங்களில் 10 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்று கேட்டு இருப்பதாக அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் தெரிவித்தார்.
மருத்துவ கவுன்சிலிங் தேதி இதுவரையில் அறி விக்கப்படவில்லை. அதனால் என்ஜினீயரிங் கலந்தாய்வு பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 2 லட்சம் மாணவர்கள் இதற்காக காத்திருக்க கூடிய நிலைமையை தவிர்க்கும் வகையில் கவுன்சிலங் தேதி அறிவிக்கப்பட்டு இருப்பதாக தொழில்நுட்ப கல்வி ஆணையர் வீரராகவ ராவ் தெரிவித்தார்.
என்ஜினியரிங் தர வரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த செங்கல்பட்டு மாணவி தோஷிதா லட்சுமி அண்ணா பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் (இ.சி.இ) படிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். ஆங்கிலம் தவிர 5 பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்ற அவர் பிளஸ்-2 தேர்வில் 600-க்கு 598 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/seemanseethalaksmi_1736850946.jpg)
ஈரோடு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி : சீமான் அறிவிப்பு
செவ்வாய் 14, ஜனவரி 2025 4:00:51 PM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/vallalargovernor_1736830143.jpg)
வள்ளலார் சனாதன தர்மத்தை போதித்தார்: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
செவ்வாய் 14, ஜனவரி 2025 9:52:27 AM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/traint4i34i_1736750421.jpg)
பொங்கல்: பண்டிகை சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு மேலும் ஒரு சிறப்பு ரயில்!
திங்கள் 13, ஜனவரி 2025 12:10:25 PM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/rajiniajithcarace_1736748338.jpg)
துபாய் கார் பந்தயத்தில் 3-வது இடம்: அஜித்குமாருக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!
திங்கள் 13, ஜனவரி 2025 11:32:48 AM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/veeravanallutherottam_1736747049.jpg)
வீரவநல்லூர் பூமிநாதர் சுவாமி திருக்கோவில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு திருத் தேரோட்டம்!
திங்கள் 13, ஜனவரி 2025 11:13:01 AM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/annamalaibjp_1736737610.jpg)
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை பாஜக புறக்கணிப்பு: அண்ணாமலை அறிவிப்பு
திங்கள் 13, ஜனவரி 2025 8:35:22 AM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/nellaiapparyanai_1736737176.jpg)