» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சித்தப்பாவின் கழுத்தை அறுத்து கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை!
வியாழன் 13, ஜூன் 2024 9:53:15 PM (IST)
தந்தையை திட்டிய சித்தப்பாவின் கழுத்தை அறுத்து கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
நெல்லை மாவட்டம் மருதூர் கீழத் தெருவை சேர்ந்தவர் ஆண்டியா மகன் ஆறுமுக கனி. கூலி வேலை செய்து வருகிறார். அதே பகுதியில் வசித்து வருபவர் ஆண்டியாவின் தம்பி கல்யாணி. இந்நிலையில் கல்யாணியின் 2 மாடுகளை அவருக்கு தெரியாமல் ஆண்டியா சந்தையில் விற்றுள்ளார் இதனால் ஆத்திரமடைந்த கல்யாணி ஆண்டியாவின் வீட்டிற்கு சென்று கடந்த 21/1/ 2016 அன்று எனக்கு தெரியாமல் எப்படி என் மாட்டை விட்டாய் என கூறி சண்டை போட்டுள்ளார்.
இந்த சம்பவத்தை ஆண்டியா வீட்டிற்கு வந்த தனது மகனான ஆறுமுகக் கனியிடம் உனது சித்தப்பா கல்யாணி வீட்டுக்கு வந்து என்னை அசிங்கப்படுத்தி விட்டார் என கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த ஆறுமுக கனி கல்யாணியை மருதூர் அணைக்கட்டு அருகே வைத்து தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்து பின்னர் தலையை தனியாக எடுத்து தூத்துக்குடி மாவட்ட முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியான கலியாவூர் பள்ளிவாசல் தெருவில் அமைந்துள்ள பிள்ளையார் கோவிலில் வைத்து சென்றுள்ளார்.
இந்த கொலை தொடர்பாக முறப்பநாடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் இரண்டில் நடைபெற்று வந்தது வழக்கை விசாரணை செய்த நீதிபதி உதய வேலன் சித்தப்பாவை கொடூரமாக கொலை செய்த ஆறுமுகக் கணிக்கு ஆயுள் தண்டனை மற்றும் 5000 ரூபாய் அபராதம் தலையை துண்டித்து மற்றொரு இடத்தில் கொண்டு வைத்ததற்காக 7 ஆண்டு சிறை தண்டனை ஐயாயிரம் ரூபாய் அபராதம் என தீர்ப்பு அளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் சேவியர் ஆஜரானார்.