» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நாங்குநேரி வட்டத்தில் 2ஆம் நாளாக ஜமாபந்தி: ஆட்சியர் மனுக்களை பெற்றுக்கொண்டார்!

வியாழன் 13, ஜூன் 2024 5:37:45 PM (IST)



நாங்குநேரி வட்டத்தில் இரண்டாம் நாளாக நடைபெற்ற ஜமாபந்தியில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன் பெற்றுக்கொண்டார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 8 வட்டங்களில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நடைபெற்று வருகிறது. இன்று (13.06.2024) நாங்குநேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் இரண்டாம் நாளாக நடைபெற்ற வருவாய் தீர்வாய நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் கா.ப.கார்த்திகேயன், கலந்துகொண்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்கள்.

இன்றையதினம் நாங்குநேரி வட்டம், களக்காடு குறுவட்டத்திற்குட்பட்ட பத்தை பகுதி-1, பத்தை பகுதி-2, வடமலைசமுத்திரம், இடையன்குளம், தேவநல்லூர், கீழகாடுவெட்டி, சிங்கிகுளம் பழையகிராமம், மேல்கரை, இனம் இடையன்குளம், தெநீPர்குளம், சிங்கிகுளம் புதுகிராமம் ஆகிய கிராமங்களுக்கு நடைபெற்ற வருவாய் தீர்வாய நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கலந்துகொண்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற்றுக்கொண்டார்கள்.

தொடர்ந்து, 14.06.2024 அன்று மூன்றாம் நாளாக நாங்குநேரி வட்டம் ஏர்வாடி குறுவட்டத்திற்குட்பட்ட படலையார்குளம், சீவலப்பேரி, பழங்குளம், கோவில்லம்மாள்புரம், உச்சிக்குளம், ஆலங்குளம், திருவரங்கனேரி, கடம்போடுவாழ்வு, திருக்குறுங்குடி பகுதி-1 ஆகிய கிராமங்களுக்கும், திருநெல்வேலி வட்டம் நாரணம்மாள்புரம் குறுவட்டத்திலும், இராதாபுரம் வட்டம் பழவூர் மற்றும் பணகுடி குறுவட்டத்திலும், பாளையங்கோட்டை வட்டம் முன்னீர்பள்ளம் குறுவட்டத்திலும், சேரன்மகாதேவி வட்டம் மேலச்செவல் குறுவட்டத்திலும், அம்பாசமுத்திரம் வட்டம் சிங்கம்பட்டி மற்றும் அம்பாசமுத்திரம் குறுவட்டத்திலும், திசையன்விளை வட்டம், திசையன்விளை குறுவட்டத்திலும், மானூர் வட்டம், மானூர் குறுவட்டம் ஆகிய கிராம பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள்; நடைபெறும் வருவாய் தீர்வாயம் நிகழ்ச்சியில் வருவாய் தீர்வாய அலுவலர்களிடம் வழங்கி தங்களது கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காணலாம் என மாவட்ட ஆட்சியர் மருத்துவர்.கா.ப.கார்த்திகேயன், தெரிவித்தார்கள்.

மேலும், இன்றையதினம் மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா தலைமையில் திருநெல்வேலி வட்டம் மதவக்குறிச்சி மற்றும் நாரணம்மாள்புரம் குறுவட்டத்திலும், சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அர்பித் ஜெயின், தலைமையில் இராதாபுரம் வட்டம் சமூகரெங்கபுரம் மற்றும் பழவூர் குறுவட்டத்திலும், திருநெல்வேலி கோட்டாட்சியர் கண்ணா கருப்பையா தலைமையில் பாளையங்கோட்டை வட்டம், மேலப்பாட்டம் குறுவட்டத்திலும், திருநெல்வேலி துணை ஆட்சியர்/ஆய்வுக்குழு அலுவலர் சி.கிறிஸ்டி தலைமையில் சேரன்மகாதேவி வட்டம், மேலச்செவல் குறுவட்டத்திலும், தனித்துணை ஆட்சியர் (வருவாய் நீதிமன்றம்) பா.ஜெயராணி தலைமையில் அம்பாசமுத்திரம் வட்டம் சிங்கம்பட்டி குறுவட்டத்திலும், துணை ஆட்சியர்/மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சிவகாமசுந்தரி தலைமையில் திசையன்விளை வட்டம், விஜயநாராயணம் மற்றும் திசையன்விளை குறுவட்டத்திலும், தனித்துணை ஆட்சியர் (நிலஎடுப்பு) (நதிநீர் இணைப்பு திட்டம்) காசி தலைமையில் மானூர் வட்டம், தாழையூத்து மற்றும் மானூர் குறுவட்டங்கள் ஆகிய பகுதிகளில் வருவாய் தீர்வாய நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. வருவாய் தீர்வாய நிகழ்ச்சியில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு சம்மந்தப்பட்ட துறைகளின் மூலம் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிகழ்ச்சியில், உதவி ஆட்சியர் (பயிற்சி) அம்பிகா ஜெயின், நாங்குநேரி வட்டாட்சியர் பாலகிருஷ்ணன், சமூக பாதுகாப்புத் திட்டம் வட்டாட்சியர் பத்மபிரியா, ஆதிதிராவிடர் நலன் தனிவட்டாட்சியர் இசக்கிபாண்டியன், நாங்குநேரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் யமுனா, ராஜேஸ்வரன் உட்பட அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory