» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழை: திற்பரப்பு அருவியில் குளிக்க தடை!

வெள்ளி 17, அக்டோபர் 2025 10:25:13 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று பகல் முழுக்க மழை நீடித்தது. திற்பரப்பு அருவி ஆர்ப்பரித்துக் கொட்டியதால் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

மாவட்டத்தில் நேற்று காலை வரை பதிவான மழையளவு (மி.மீட்டரில்): குருந்தன்கோடு 38, பாலமோர் 31.4, நாகர்கோவில் மற்றும் பூதப்பாண்டி தலா 30.2, குளச்சல் - 26, கொட்டாரம் 25.6, ஆரல்வாய்மொழி 24, தக்கலை 23.4, திற்பரப்பு - 21.2, சிற்றாறு-2 - 18.4, புத்தன் அணை மற்றும் சுருளக் கோடு - 17.2, பெருஞ்சாணி 15.8, சிற்றாறு-1, பேச்சிப்பாறை, களியல் மற்றும் கோயில்போர்விளை தலா 14.2, முள்ளங்கினாவிளை மற்றும் குழித்துறை 13.8, மைலாடி 13.2, முக்கடல் அணை 12.3, அடையாமடை 10.4 மி.மீ. மழை பதிவானது. மொத்தம் 505.9 மி.மீ. மழை பதிவானது.

பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 40.14 அடியாக உயர்ந்தது. 560 கன அடி தண்ணீர் வருகிறது. 361 கன அடி திறக்கப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 59.53 அடியாக உள்ளது. 579 கன அடி தண்ணீர் வருகிறது. 285 கன அடி தண்ணீர் வெளியேறுகிறது. சிற்றாறு-1 அணையில் நீர்மட்டம் 5.41 அடியாக உள்ளது. 140 கன அடி தண்ணீர் வருகிறது. 175 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. திற்பரப்பு அருவி ஆர்ப்பரித்துக் கொட்டியதால் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory