» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: ஆட்சியர் ஆய்வு
செவ்வாய் 14, அக்டோபர் 2025 5:05:39 PM (IST)

திங்கள் நகரில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் பேரூராட்சிக்குட்பட்ட திங்கள் நகர் குமார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, துவக்கி வைத்து நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலன் கருதி, அவர்களின் பகுதிகளிலேயே நேரிடையாக சென்று முகாம்கள் நடத்தி கோரிக்கை மனுக்களை பெற, உங்களுடன் ஸ்டாலின் என்ற அற்புதமான திட்டத்தினை செயல்படுத்தினார்கள். இத்திட்டம் அக்டோபர் மாதம் 30ம் தேதி வரை நடத்திட அறிவுறுத்தியுள்ளார்.
அதனடிப்படையில் இன்று கல்குளம் வட்டம் திங்கள்நகர் பேரூராட்சிக்குட்பட்ட 1 முதல் 8 வார்டு பொதுமக்களுக்கு திங்கள்நகர் குமார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமினை நேரில் பார்வையிட்டு, பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு, அவர்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்கப்பட்டு வருவதை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தகுதியானவர்களுக்கு உடனடியாக ஆணைகள் வழங்கிட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
நமது கன்னியாகுமரி மாவட்டத்தில் 15.07.2025 முதல் 10.10.2025 வரை 281 முகாம்கள் நடத்தப்பட்டு 1,41,249 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற முகாமில் வேளாண்மை துறையின் சார்பில் வேளாண் இடுபொருள் மற்றும் காய்கறி விதைத்தொகுப்பு வேண்டி விண்ணப்பித்த விவசாயிகளுக்கு உடனடியாக வழங்கப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பைக் விபத்தில் பிளஸ்-2 மாணவன் உயிரிழப்பு: குளச்சல் அருகே சோகம்!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 4:58:56 PM (IST)

அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025 நேரடி சேர்க்கை: அக்.17 வரை விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 4:03:48 PM (IST)

தேசிய சுகாதார திட்டத்தில் 18 பணியிடங்கள் : விண்ணப்பங்கள் வரவேற்பு
செவ்வாய் 14, அக்டோபர் 2025 10:42:34 AM (IST)

கிணற்றில் குதித்த பெண்ணை மீட்கும் முயற்சி: தீயணைப்பு வீரர் உட்பட 3 பேர் பலி!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 10:35:02 AM (IST)

குடிபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகள்: ஒரே நாளில் 24 வாகனங்கள் பறிமுதல்!
திங்கள் 13, அக்டோபர் 2025 3:59:11 PM (IST)

குமரி குகநாதீஸ்வரர் கோவிலில் சிவலிங்க வடிவத்தில் 1008 சங்காபிஷேகம்!
திங்கள் 13, அக்டோபர் 2025 11:55:21 AM (IST)
