» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பைக் விபத்தில் பிளஸ்-2 மாணவன் உயிரிழப்பு: குளச்சல் அருகே சோகம்!

செவ்வாய் 14, அக்டோபர் 2025 4:58:56 PM (IST)

குளச்சல் அருகே பைக் விபத்தில் காயம் அடைந்த பள்ளி மாணவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். 

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள கொட்டில்பாடு காரித்தாஸ் காலனியை சேர்ந்தவர் ததேயூஸ். மீன்பிடித்தொழில் செய்து வருகிறார். இவருடைய மகன் சுர்ஜின் (17) குளச்சலில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

கடந்த வாரம் சுர்ஜின் கொட்டில்பாட்டை சேர்ந்த தனது நண்பர்கள் சகாய அஸ்வின் (17), ரிஜோ (17) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். இந்த மோட்டார் சைக்கிளை சுர்ஜின் ஓட்டினார். வெள்ளியாகுளம் பகுதியை சென்றடைந்த போது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையோரம் நின்ற மரத்தில் எதிர்பாராதவிதமாக மோதியது.

இந்த விபத்தில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதில் சகாய அஸ்வின், ரிஜோ ஆகியோர் குளச்சலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். ஆனால் தலையில் பலத்த காயமடைந்த சுர்ஜினுக்கு திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த ஒரு வாரமாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory