» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரி குகநாதீஸ்வரர் கோவிலில் சிவலிங்க வடிவத்தில் 1008 சங்காபிஷேகம்!
திங்கள் 13, அக்டோபர் 2025 11:55:21 AM (IST)

கன்னியாகுமரி பழமையான ஸ்ரீகுகநாதீஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத திருவாதிரை நட்சத்திரத்தையொட்டி இன்று 1008 சங்காபிஷேகம் நடந்தது.
கன்னியாகுமரி ரயில் நிலைய சந்திப்பில் ஸ்ரீகுகநாதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் 1000 ஆண்டுகள் பழமையானது. தஞ்சை பெரிய கோவிலை கட்டுவதற்கு முன்பே மாமன்னன் ராஜராஜ சோழன் இந்த கோவிலை கட்டியதாக வரலாற்று சான்றுகள் தெரிவிக்கின்றன.
இங்கு குகன் என்ற முருகப்பெருமான், சிவபெருமானை வழிபட்டதால் இந்த கோவிலுக்கு குகநாதீஸ்வரர் கோவில் என்று பெயர் வரக்காரணமாயிற்று. குமரி மாவட்டத்திலேயே மிக உயரமான ஐந்தரை அடி உயர சிவலிங்கம் இந்த கோவிலில் தான் அமைந்து உள்ளது.
அப்படிப்பட்ட புகழ் பெற்ற இந்த குகநாதீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று 1008 சங்காபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு புரட்டாசி மாத திருவாதிரை நட்சத்திரத்தையொட்டி இன்று 1008 சங்காபிஷேகம் நடந்தது.
இதையொட்டி காலையில் கணபதி ஹோமமும் தீபாராதனையும் நடந்தது. பின்னர் 1008 வலம்புரி சங்குகளை சிவலிங்க வடிவத்தில் அடுக்கி வடிவமைத்து வைத்து அதில் புனித நீர் நிரப்பி சங்குபூஜை நடத்தப்பட்டது. அதன்பிறகு அந்த சங்குகளில் உள்ள புனித நீரால் குகநாதீஸ்வர பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி கடற்கரையில் 50- க்கும் மேற்பட்ட நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
வெள்ளி 7, நவம்பர் 2025 4:58:48 PM (IST)

ரியல் எஸ்டேட் தொழிலதிபரிடம் பணம் இரட்டிப்பு மோசடியில் ஈடுபட்ட மூவர் கைது
வெள்ளி 7, நவம்பர் 2025 4:56:19 PM (IST)

ஐப்பசி பௌர்ணமி: கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி!
வியாழன் 6, நவம்பர் 2025 3:42:47 PM (IST)

இயற்கையைக் காப்போம்: கன்னியாகுமரி முதல் சென்னை வரை மிதிவண்டிப் பேரணி!
வியாழன் 6, நவம்பர் 2025 3:15:35 PM (IST)

பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக மாற்றும் திமுக: பாஜக நிர்வாகி குற்றச்சாட்டு!
வியாழன் 6, நவம்பர் 2025 12:46:41 PM (IST)

கழகத்தை காக்க சின்னம்மாவை அழைத்து வாருங்கள் : நாகர்கோவிலில் பரபரப்பு போஸ்டர்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:02:51 AM (IST)


.gif)