» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குடியிருப்பு பகுதிக்கு வந்த மலைப்பாம்பு : பத்திரமாக மீட்ட வனத்துறையினர்!

வியாழன் 16, அக்டோபர் 2025 8:07:39 PM (IST)



தாழக்குடி அருகே கோழியை பிடிப்பதற்காக குடியிருப்பு அருகில் வந்த 7 அடி நீள மலைப்பாம்பை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். 

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டம் தாழக்குடி பேரூராட்சிகுட்பட்ட 1-வது வார்டு சீதப்பால் பகுதியில் கேபிள் டிவி நடத்தி வரும் ராஜேஷ் என்பவர் வீட்டின் அருகில் உள்ள தோப்பில் வாத்து கோழிகள் இறை தேடி வருகின்றன அதனை பிடிப்பதற்காக வந்த சுமார் 7 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு அதன் அருகில் உள்ள வலையில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது 

இதனைப் பார்த்த ராஜேஷ் தாழக்குடி பேரூராட்சி முன்னாள் தலைவரும் கவுன்சிலர் ரோகினிஅய்யப்பன் அவர்களுக்கு தகவல் கொடுத்தார்  அவர் மாவட்ட வன அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார் அதன் அடிப்படையில் பூதப்பாண்டி வனச்சரகர் அன்பழகன் உத்தரவின் பேரில் வேட்டை தடுப்பு காவலர் அந்தோணிராஜன் விரைந்து வந்து வலையில் சிக்கிய மலைப்பாம்பினை பத்திரமாக பிடித்து அடர்ந்த காட்டுப் பகுதியில் கொண்டு விட்டனர் இதனால் வீட்டில் உள்ளவர்கள் நிம்மதி அடைந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory