» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குலசை தசரா பக்தர்களுக்கு திமுக பிரமுகர் இடையூறு - ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

திங்கள் 15, செப்டம்பர் 2025 3:12:08 PM (IST)



ஆறுமுகநேரியில் தசரா பிறை அமைக்க விடாமல் திமுக பிரமுகர் இடையூறு ஏற்படுத்துவதாக மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குலசை தசரா பக்தர்கள் கோரிக்கை மனு அளித்தனர். 

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி முத்துகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்த பல ஆண்டுகளாக அந்த பகுதியில் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் ஆலய தசரா திருவிழாவிற்காக விரதம் இருந்து பல்வேறு வேடங்கள் அணிந்து சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இவ்வாறு விரதம் இருக்கும் பக்தர்கள் தசரா காலங்களில் வீட்டில் தங்காமல் வெளியே தசரா பிறை அமைத்து அதில் தங்கி வழிபாடு நடத்துவார்கள். 

இந்த ஆண்டு அந்தப் பகுதியைச் சேர்ந்த ஓம் ஸ்ரீ முத்தாரம்மன் தசரா குழு சார்பில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் மாலை அணிந்து விரதம் இருந்து வருகின்றனர். இந்நிலையில் அந்த பகுதியில் தசரா பிறை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனிடையே அந்த பகுதியைச் சேர்ந்த ஊர் தலைவரும் திமுகவை சேர்ந்தவருமான ஜானகிராமன் என்பவர் ஏற்கனவே உள்ளாட்சி தேர்தலில் தான் ஆதரவு அளித்த திமுகவை சேர்ந்த நபருக்கு ஆதரவளிக்காமல் அதிமுகவை சேர்ந்த சிவக்குமார் என்பவருக்கு ஆதரவு தெரிவித்து அவர் கவுன்சிலராக வெற்றி பெற்றுள்ளார்.

இதனால் ஜானகிராமன் உள்ளாட்சித் தேர்தல் முன்விரோதத்தை மனதில் வைத்துக் கொண்டு தசரா குழுவினர் அந்தப் பகுதியில் தசரா பிறை அமைக்க கூடாது என காவல்துறை துணையுடன் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதன் காரணமாக அந்த பகுதியில் மாலை அணிந்து விரதம் இருந்து வரும் பக்தர்கள் தாங்கள் வழிபாடு நடத்த முடியாமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் தலையிட்டு தங்களுக்கு தங்களது தசரா குழுவினர் வழிபட தசரா பிறை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.


மக்கள் கருத்து

AahaanSep 15, 2025 - 09:01:34 PM | Posted IP 104.2*****

Councilor ta solli solve panalaya

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory