» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்: கனிமொழி தலைமையில் உறுதிமொழி ஏற்பு
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:48:00 PM (IST)

தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என்று கன்னியாகுமரியில் கனிமொழி எம்பி தலைமையில் திமுகவினர் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.
தமிழ்நாட்டின் மண் - மொழி - மானம் காக்க திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் "ஓரணியில் தமிழ்நாடு" இயக்கத்தின் கீழ் கழகத்தில் இணைந்துள்ள ஒரு கோடி குடும்பங்கள் பேரறிஞர் அண்ணா அவர்களது பிறந்த நாளான இன்று, "தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்" என்ற தலைப்பில் கன்னியாகுமரியில் தீர்மானம் எடுக்கும் நிகழ்ச்சி கனிமொழி எம்பி தலைமையில் நடைபெற்றது.
முன்னதாக பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்க்கு கனிமொழி எம்.பி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில், கன்னியாகுமரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், பால்வள மேம்பாட்டுத்துறை அமைச்சருமான மனோ தங்கராஜ், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ரெ.மகேஷ், முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், திமுக மகளிரணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை கொன்று குளத்தில் வீசிய கொடூரம்: இளம்பெண் கைது!
திங்கள் 15, செப்டம்பர் 2025 12:53:57 PM (IST)

மைசூர் - திருநெல்வேலி சிறப்பு ரயிலை கன்னியாகுமரியிலிருந்து இயக்க கோரிக்கை!
திங்கள் 15, செப்டம்பர் 2025 10:12:10 AM (IST)

மின்கம்பத்தில் தொங்கியவாறு கேங்மேன் மரணம் : போலீஸ் விசாரணை!
சனி 13, செப்டம்பர் 2025 5:46:58 PM (IST)

ரயிலில் கார்களை கொண்டு செல்ல சேவை தொடங்க வேண்டும்: பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை!
சனி 13, செப்டம்பர் 2025 4:19:08 PM (IST)

மருந்தகம் அமைப்பதற்கு ஒப்புதல் வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம்: ஆய்வாளர் கைது
சனி 13, செப்டம்பர் 2025 11:44:13 AM (IST)

நாகர்கோவிலில் கஞ்சா விற்பனை செய்த 3பேர் கைது: 1½ கிலோ கஞ்சா, கார், பைக் பறிமுதல்!
சனி 13, செப்டம்பர் 2025 10:15:16 AM (IST)
