» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

திங்கள்சந்தை- புதுக்கடை சாலையில் பாலம் பணி: 10 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் ரத்து!

திங்கள் 15, செப்டம்பர் 2025 5:00:08 PM (IST)

திங்கள்சந்தை- புதுக்கடை சாலையில் பாலம் கட்டும் பணி  காரணமாக  10 தினங்களுக்கு குடிநீர்  வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு துறை மூலம் திங்கள்சந்தை- புதுக்கடை சாலை கி.மீ 11/10ல்  திக்கணங்கோடு சந்திப்பில்  பாலம் கட்டும் பணி நடைபெறுவதால்  அவ்வழியாக  செல்லும்  79 வழியோர கடலோர  கிராமங்களுக்கான கூட்டு குடிநீர் திட்டத்தின்  500 மி.மீ விட்டமுள்ள  குடிநீர் குழாய் மாற்றியமைக்க வேண்டியுள்ளதால் அந்த குடிநீர் திட்டத்திலிருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படும் அகஸ்தீஸ்வரம், அஞ்சுகிராமம், தென்தாமரைக்குளம், கல்லுக்கூட்டம், மண்டைக்காடு, திங்கள்நகர், வெள்ளிமலை, கணபதிபுரம், புத்தளம் பேரூராட்சிகளுக்கும் மற்றும் கோவளம், லீபுரம், மகாராஜபுரம், பஞ்சலிங்கபுரம், முட்டம், ஆத்திக்காட்டுவிளை, தர்மபுரம், மணக்குடி, பள்ளம், இராஜாக்கமங்கலம், திக்கணங்கோடு ஆகிய ஊராட்சிகளுக்கும் 10 தினங்களுக்கு குடிநீர்  வினியோகம் இருக்காது என ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory