» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஆயுத பூஜை, தீபாவளி: சென்னை - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்!!

செவ்வாய் 16, செப்டம்பர் 2025 3:56:34 PM (IST)

ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. 

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள அறிக்கையில் "சென்னை தாம்பரத்திலிருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. தாம்பரத்திலிருந்து நாகர்கோவிலுக்கு வாரத்தில் ஒருநாள் மட்டும் ரயில் இயங்கும். 

செப்டம்பர் 29, அக்டோபர் 06, 13, 20, 27 (திங்கட்கிழமை) ஆகிய தேதிகளில் மட்டும் இந்த சிறப்பு ரயில் இயக்கப்படும். தாம்பரத்திலிருந்து பிற்பகல் 3.30 மணிக்கு கிளம்பும் இந்த ரயில், நாகர்கோவிலில் மறுநாள் காலை 5.15 மணிக்கு சென்றடையும்.

அதேபோல், நாகர்கோவிலிலிருந்து தாம்பரத்திற்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும். செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 26 வரை ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் இந்த ரயில் இயக்கப்படும். நாகர்கோவிலிலிருந்து இரவு 11.15 மணிக்கு கிளம்பும் இந்த ரயில், தாம்பரத்தில் மறுநாள் நண்பகல் 12.30 மணிக்கு வந்து சேரும்.

இந்த ரயில் வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், பண்ருட்டி, விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு வழியாக தாம்பரத்தை அடையும். மறுமார்க்கத்திலும் இதே வழித்தடத்தில் ரயில் இயங்கும். இந்த ரயிலுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்கும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory