» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பெண் வருவாய் ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை

புதன் 21, மே 2025 10:36:30 AM (IST)

குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்த வருவாய் ஆய்வாளர் அனிதா என்பவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

நாகர்கோவில் இருளப்பபுரம் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் மனோகரன். மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அனிதா (42). நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக பணியில் இருந்து வந்தார். உடல் நிலை சரியில்லாமல் 2 மாதங்களாக மருத்துவ விடுப்பில் இருந்து வந்த அனிதா நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து கோட்டாறு போலீசார் அனிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சில மாதங்களாக மன அழுத்தம் காரணமாக அனிதா சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் தற்கொலை செய்தாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory