» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி பகவதியம்மன் கோயில் வைகாசித் திருவிழா: கால்நாட்டு விழா

வெள்ளி 23, மே 2025 12:36:55 PM (IST)

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயில் விசாகக் திருவிழாவை முன்னிட்டு இன்று கால்நாட்டு விழா நடைபெற்றது. 

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் வைகாசி விசாகத் திருவிழா 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு திருவிழா இம்மாதம் 31ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இத்திருவிழாவுக்கான கால் நாட்டு நிகழ்ச்சி கோயில் வளாகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடைபெற்றது. 

இதைத்தொடா்ந்து தெற்கு ரத வீதியில் உள்ள கன்னியம்பலம் முன்பு கால் நாட்டு நிகழ்ச்சி நடந்தது. மேலும், 1ஆம் நாள் திருவிழாவான மே 31ஆம் தேதி காலையில் கொடியேற்ற நிகழ்ச்சி நிறைவடைந்ததும், கீழ ரத வீதியில் தோ் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இடத்திலும் கால்நாட்டு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் நிா்வாகம் செய்து வருகின்றது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory