» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி: அரசு தொழில்நுட்ப கல்லூரியில் புதிய பாடத்திட்டம் தொடக்கம்!
செவ்வாய் 20, மே 2025 10:12:53 AM (IST)
கோணம் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பட்டயப் படிப்பு புதிய பாடத்திட்டம் புதிதாக துவங்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசும் TATA புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமும் இணைந்து தமிழ்நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி என்ற புதியப் பட்டய படிப்பு அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2025-2026 ஆம் கல்வியாண்டில் தொடங்க இருக்கிறது. இது உதவித்தொகையுடன் கூடிய கல்வி திட்டமாகும் (Earn while you learn). இந்த படிப்பிற்கு கல்வித்தகுதி பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்பாடத்திட்டத்தின் பயிற்சி காலம் மூன்று ஆண்டுகள் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் மூன்று மாதம் கல்லூரியிலும் ஒன்பது மாத காலம் TATA நிறுவனத்திலும் பயிற்சி வழங்கப்படும்.
அனைத்து மாணவர்களுக்கும் மாதாந்திர உதவித்தொகை மூன்று வருட காலமும் வழங்கப்படும். நிறுவனத்தில் அளிக்கப்படும் ஒன்பது மாத பயிற்சி காலங்களில் தங்கும் வசதி, போக்குவரத்து வசதி, உணவு, சீருடை மற்றும் பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படும். முதலாம் ஆண்டில் - முதல் மூன்று மாதங்களும் கல்லூரி வகுப்பின் போது மாதந்தோறும் ரூ.4000/-ம், ஒன்பது மாத பயிற்சியின் போது மாதந்தோறும் ரூ.8000/-ம் வழங்கப்படும். இரண்டாம் ஆண்டில் - முதல் மூன்று மாதங்களும் கல்லூரி வகுப்பின் போது ரூ.4250/-ம், ஒன்பது மாத பயிற்சியின் போது மாதந்தோறும் ரூ.9000/-ம் வழங்கப்படும். மூன்றாம் ஆண்டில் - முதல் மூன்று மாதங்களும் கல்லூரி வகுப்பின் போது ரூ.4500/-ம், ஒன்பது மாத பயிற்சியின் போது மாதந்தோறும் ரூ.10000/-ம் வழங்கப்படும்.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை (Renewable Energy) என்ற புதிய பாடப்பிரிவு உசிலம்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரி (9876543210), ஆண்டிபட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரி (9442210859), திருநெல்வேலி அரசு பாலிடெக்னிக் கல்லூரி (0462 2984564), தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி (9442533052), மதுரை அரசு பாலிடெக்னிக் கல்லூரி (9443748435), செக்கானூரணி அரசு பாலிடெக்னிக் கல்லூரி (7539983979), தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பி.சி.எம். டபிள்யூ (9080727216) உள்ளிட்ட கல்லூரிகளில் புதிதாக துவக்கப்பட்டுள்ளது.
மேலும் கோணம் அரசு தொழில்நுட்ப கல்லூரியில் அமைப்பியல் துறை (Civil), இயந்திரவியல் துறை (Mechanical), மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை (Electrical and Electronics), கணினி துறை (Computer), உயிரி மருத்துவ மின்னணுவியல் துறை (Bio Medical Electronics), புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை (Renewable Energy) உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கும் 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கு முதலாமாண்டு மற்றும் நேரடி இரண்டாண்டு மாணவர் சேர்க்கை நாகர்கோவில் கோணம் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்று வருகிறது.
இப்பாடப் பிரிவுகளில் விண்ணப்பிக்க https://www.tnpoly.in என்ற இணைய தளம் வாயிலாகவோ அல்லது அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள சேர்க்கை சேவை மையம் வாயிலாகவோ விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணம் ரூ.150/-. SC/ST பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. விண்ணப்பிக்க கடைசி நாள். 23.05.2025 (வெள்ளிக்கிழமை). மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள 9443361094 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் உதவித்தொகையுடன் கூடிய இப்புதிய பாடத்திட்டத்தில் சேர்ந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி சார்பில் படகு ஓட்டுநர் பயிற்சி தொடக்கம்!
வெள்ளி 23, மே 2025 5:52:30 PM (IST)

அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்!
வெள்ளி 23, மே 2025 5:18:23 PM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 20 ஆண்டு சிறை : போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 23, மே 2025 12:39:23 PM (IST)

குமரி பகவதியம்மன் கோயில் வைகாசித் திருவிழா: கால்நாட்டு விழா
வெள்ளி 23, மே 2025 12:36:55 PM (IST)

ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டர் ஓட்டிய காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ.வுக்கு அபராதம்
வெள்ளி 23, மே 2025 12:01:43 PM (IST)

கொடை விழா தகராறில் இட்லி கடைக்காரா் கைது : காவல் நிலையத்தில் உறவினா்கள் முற்றுகை!
வியாழன் 22, மே 2025 8:34:20 AM (IST)
