» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பெண் தவறவிட்ட தங்கச் செயினை ஒப்படைத்த இளைஞர்கள்: காவல்துறை பாராட்டு!

வியாழன் 10, ஏப்ரல் 2025 5:35:54 PM (IST)



தோவாளை கோவில் தேரோட்ட திருவிழாவில் பெண் தவறவிட்ட கைச்செயினை இளைஞர்கள் கண்டெடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டம் தாழக்குடி அருள்மிகு அழகேஸ்வரி ஜெயந்திஸ்வரர் திருக்கோவிலில் நடைபெற்ற பங்குனி தேரோட்ட திருவிழாவில் ஏராளமான பக்த பெருமக்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவில் கார்த்திகா என்ற பெண் தவறவிட்ட ஐம்பொன் தங்கச் சங்கிலியை தாழக்குடி இளைஞர்கள் எடுத்து தாழக்குடி பேரூராட்சி முன்னாள் தலைவரும் கவுன்சிலர் ரோகிணிஅய்யப்பன் அவர்களிடம் ஒப்படைத்தனர். 

அதனை ஆரல்வாய்மொழி காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜன் மற்றும் சகாயராஜ் ஆகியவரிடம் கொடுக்கப்பட்டது.பின்னர் தவறவிட்ட கார்த்திகா  பெற்று சென்றார்கள்.  காவல் ஆய்வாளர்கள் அந்த பெண்மணியிடம் அறிவுரை கூறி நகையினை கொடுத்து அனுப்பினார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory